ரமேஷ் பிரேதனுக்கு உதவுங்கள்

நானும் கோணங்கியும் பாண்டிச்சேரி செல்லும் நாட்களில் ரமேஷை சந்தித்துப் பேசுவது வழக்கம். ஒருமுறை கருத்தரங்கிற்காகப் புதுவை போயிந்த போது என்னை ரமேஷ் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவளித்து இரவு தங்க செய்தார்.  அன்று நிறையப் பேசிக் கொண்டிருந்தோம்.

ரமேஷ் பின்நவீனத்துவப் புனைவெழுத்தில் மிகச்சிறந்தவர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள் எழுதிவருகிறார்

பிரேம் ரமேஷ் இணைந்து செயல்பட்ட காலத்தில் தீவிரமான அலையொன்றை இலக்கியச்சூழலில் ஏற்படுத்தினார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக ரமேஷ் உடல்நலக்குறைவு ஏற்பட்டுச் சிகிட்சை எடுத்துவருகிறார் என்பதை அறிவேன். அவருக்கு மருத்துவ உதவிகள் மேற்கொள்ளவும், எழுத்துப்பணியைத் தொடரவும் நிதிஉதவி தேவைப்படுகிறது.

நண்பர் மாமல்லன் அவருக்காகப் பேஸ்புக் வழியாக நிதி திரட்டி வருகிறார். அது மிகுந்த பாராட்டிற்குரியது.

எழுத்தை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்ட ரமேஷ் பிரேதனுக்கு உதவி செய்ய வேண்டியது நமது கடமை.

நண்பர்கள், இலக்கிய வாசகர்கள் உங்களால் முடிந்த உதவிகளை அவருக்கு அளியுங்கள்.

ரமேஷ் வங்கி விபரம்

M. Ramesh

State Bank of India

SB A/c no. 32821202848

IFSC: SBIN0015420

SBI, Muthialpet Branch,

Pondicherry – 605003

••

ரமேஷ் இல்ல முகவரி

M. Ramesh

27, Angalamman Koil Street,

Angalamman Nagar,

Muthialpettai,

Pondicherry 605003

+91 86086 10563

•••

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: