தேசாந்திரி பதிப்பகம் தொடக்கவிழா

தேசாந்திரி பதிப்பகத்தின் தொடக்கவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிரம்பிய கூட்டம். இடம் கிடைக்காமல் நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள். நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் 70 சதவீதம் இளைஞர்கள். அனைவரின் அன்பும் ஆதரவுமே நிகழ்ச்சியை வெற்றி பெறச்செய்தது.
தேசாந்திரி பதிப்பகம் சார்பில் எனது ஏழு புதிய நூல்கள் வெளியிடப்பட்டன.  தோழர் நல்லகண்ணு அவர்கள் எனது நூலை வெளியிட்டது மிகப்பெரிய கௌரவம்.
நிகழ்வில் பார்வையற்றவர்களுக்காக பிரெயில் மொழியில் படிக்கத் தெரிந்த சிங்கம் நூல் வெளியிடப்பட்டது.
ரஷ்ய கலாச்சார மைய இயக்குனர் மிகைல் கோர்பதேவ் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய  அனைத்து ஆளுமைகளுக்கும்  மனம் நிரம்பிய நன்றி.
தேசாந்திரி பதிப்பகம் சார்பில் புதிய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. சில தினங்களில் முழுமையாகச் செயல்படத்துவங்கும்.
நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த வாசகர்கள். நண்பர்கள். பத்திரிக்கையாளர்கள். இணையதள எழுத்தாளர்கள், மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு  மனம் நிரம்பிய நன்றி. அரங்கை ஏற்பாடு செய்து தந்த தங்கப்பன் அவர்களுக்கு நன்றி.
தேசாந்திரி பதிப்பத்தின் தூண்களாக விளங்கும் ஹரி பிரசாத், மற்றும் அவனது நண்பர்கள் குழு அனைவருக்கும், நிகழ்வைச் சிறப்பாக படம்பிடித்து இணையத்தில் பகிர்ந்து கொண்ட ஸ்ருதி டிவி கபிலனுக்கும், நூல்கள் பதிப்பிக்க உதவி செய்த பிரகாஷ், கார்த்திக் புகழேந்தி, மணிவண்ணன் ஆகியோருக்கும் தீராத நன்றிகள்.
தேசாந்திரி பதிப்பக நூல்கள் தற்போது விற்பனைக்கு கிடைக்கின்றன. தேவைப்படுகிறவர்கள் தொலைபேசியில் அழைத்து விபரம் அறிந்து  கொள்ளலாம். அல்லது மின்னஞ்சல் அனுப்பலாம்
தேசாந்திரி பதிப்பகம்
டி1 கங்கை அபார்ட்மெண்ட்ஸ்
110 எண்பதடி சாலை. சாலிகிராமம். சென்னை 93
தொலைபேசி 044 23644947
அலைபேசி 9600034659
desanthiripathippagam@gmail.com
**
விழா புகைப்படங்கள்

புகைப்படங்கள் நன்றி

ஸ்ருதி டிவி.

கமல கண்ணன், விக்கி, பாலா, ஹர்ஷி

Archives
Calendar
December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: