குறும்படமாகவுள்ள கதைகள்

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் என்ற எனது புதிய சிறுகதை தொகுப்பிலிருந்து ஓராயிரம் கைகள், வெறும் பணம் என்ற இரண்டு சிறுகதைகள் குறும்படமாக  உருவாக்கபடவுள்ளன.

ஒரே நாளில் இதற்கான அனுமதி கேட்டு இரண்டு இளைஞர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் குரலில் இருந்த ஆர்வமும் தீவிரமும் சந்தோஷம் அளித்தது.

பிரதீப் என்ற இளைஞர் சிறுகதை தொகுப்பு பற்றி உற்சாகமாகப் பேசினார்

“இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளில் பத்துகதைகளை எளிதாகக் குறும்படமாக்கி விடலாம். எதைத் தேர்வு செய்வது எனப்புரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன்.  நான்கு நண்பர்கள் ஒன்று கூடி வெறும்பணம் என்ற கதையைத் தேர்வு செய்துள்ளோம். இதற்கு அனுமதி வேண்டும் என்றார்

நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். படம் எடுத்து முடிந்தவுடன் ஒரு முறை காட்டுங்கள் என்ற கோரிக்கையை மட்டும் முன்வைத்து அனுமதி அளித்தேன். அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம்.

எட்வின் என்ற திரைக்கலை பயிலும் மாணவர் ஒராயிரம் கைகளைக் குறும்படமாக இயக்குகிறார்.

ஒரு சிறுகதைத் தொகுதி இலக்கிய வாசகர்களால் விருப்பத்துடன் வாசிக்கபடுவது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் இது போல குறும்பட இயக்குனர்களால் வாசிக்கபட்டு உடனடியாகக் குறும்படமாகப் போவது கூடுதல் சந்தோஷம்.

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் சிறுகதை தொகுப்பிலுள்ள பெரும்பான்மை கதைகள் காட்சிப்பூர்வமானவை.

ஆகவே அது குறும்பட இயக்க நினைப்பவர்களுக்குப் பிடித்திருப்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

இதிலுள்ள பாங்கிணறு என்ற கதை விரைவில் முழுநீள திரைப்படமாகவே வெளியாகயிருக்கிறது. அதன் ஆரம்பப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் -  சிறுகதை தொகுப்பினை  தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது

விலை ரூ 150

••

நூலை பெறுவதற்கு

தேசாந்திரி பதிப்பகம்

டி1, கங்கை குடியிருப்பு

எண்பதடி சாலை, சத்யா கார்டன்

சாலிகிராமம். சென்னை 93

தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659

mail id:Desanthiripathippagam@gmail.com

••

டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகக் கடையில் தேசாந்திரி பதிப்பகத்தின் எல்லா நூல்களும் விற்பனைக்குக் கிடைக்கும்.

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: