கதை சொல்கிறார்கள்


கதை சொல்கிறார்கள்

கோடைவிடுமுறையில் குழந்தைகளை ஒன்று கூட்டி எனது கடவுளின் நாக்கு புத்தகத்திலுள்ள கதைகளைப் பகிர்ந்துவருகிறார்கள் இரண்டு ஆசிரியர்கள்.

துறையூரைச் சேர்ந்த பெருமாள் என்ற ஆசிரியரும் அவரது துணைவியாரும் தங்கள் வீட்டிலே இந்தக் கதை சொல்லும் நிகழ்வை நிகழ்த்தி வருகிறார்கள். நேற்று அவர்கள் என்னிடம் தொலைபேசியில் பேசி தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.

தி இந்து நாளிதழில் கடவுளின் நாக்கு தொடராக வந்த போது விரும்பி வாசித்தோம். இப்போது அந்த நூலிலுள்ள கதைகளை மாணவர்களை எடுத்துச் சொல்கிறோம்.

சிறுவர்கள் ஆர்வமாகக் கதை கேட்கிறார்கள். விரும்பிகிற மாணவர்கள் புத்தகமும் படிக்கிறார்கள். இது போன்ற ஒரு நூலை எழுதியதற்கு நன்றி என்றார்கள்.

ஒரு புத்தகம் மௌன வாசிப்பில் தரும் அனுபவம் ஒருவிதம் என்றால் இப்படிக் கூடிக் கதை பேசுவது முற்றிலும் புதிய அனுபவம் தரும். பெருமாளுக்கும் அவரது துணைவியாருக்கும் நன்றி தெரிவித்தேன்.

புத்தகம் தேவைப்படுகிறவர்கள் தொடர்பு கொள்க.

••

கடவுளின் நாக்கு

விலை ரூ 350

••

தேசாந்திரி பதிப்பகம்

டி1 கங்கை குடியிருப்பு

எண்பதடிசாலை. சாலிகிராமம். சென்னை 93

தொலைபேசி எண் 044 23644947

அலைபேசி 9600034659

mail id:Desanthiripathippagam@gmail.com

Archives
Calendar
August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: