அநீதி

நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் எட்டு உயிர்கள் பலியாகியுள்ளன. கலவரக்காட்சிகளை வீடியோவில் பார்த்த போது எழுந்த கேள்வி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களா வாகனங்களுக்கு தீ வைக்கிறார்கள். யாரோ புல்லுருவிகள் ஊடுபுகுந்திருக்கிறார்கள்.. ஆனால் இதற்காக பழிவாங்கப்பட்டது போராட்டக்கார்களின் உயிர். துப்பாக்கியை உயர்த்தியபடியே வாகனத்தின் மீது பவனி வரும் காவலர்களைப் பாருங்கள். கார்ப்பரேட் நலம் காக்க எப்படி பணியாற்றுகிறார்கள் என்பது புரியும் .

நூறு நாட்களுக்கும் மேலாக அமைதிவழியில் போராடிய மக்களை இன்று வன்முறையாளர்களாக அரசு சித்தரிக்கிறது. ஜல்லிகட்டு போராட்டத்திலும் முடிவு இது போல தான் உருவாக்கபட்டது. அப்பாவி உயிர்களை கொன்று குவித்து வேட்டையாடுவது அநீதியின் உச்சம்.

நீதிகேட்டு மண்ணில் சிந்திய ரத்தம் ஒரு போதும் உலராது. குருதி கறை படிந்த மண் நீதியை அடைந்தே தீரும்.

ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடவும். துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாக இருந்த அரசை கண்டிக்கிறேன்.

Archives
Calendar
June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
Subscribe

Enter your email address: