வாழ்நாள் சாதனையாளர் விருது
கோவையில் கொடிசியா சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழா ஆண்டுதோறும் ஒரு படைப்பாளிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கிறது
இந்த விருது ஒரு லட்ச ரூபாய் பணமும் பட்டயமும் கொண்டது.
இந்த ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது எனக்கு வழங்கப்படுவதாக கொடிசியா அமைப்பினர் தெரிவித்துள்ளார்கள்.
அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய நன்றி
விருது வழங்கும் நிகழ்வு புத்தக கண்காட்சி நடைபெறும் கொடிசியா அரங்கில் ஜுலை 21ல் மாலையில் நடைபெறுகிறது
இதையொட்டி எனது படைப்புகள் குறித்த சிறப்பு கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது.
ஆகவே ஜுலை 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களுக்கும் கோவையில் இருப்பேன்.
விழா குறித்த இதர விபரங்களை சில தினங்களில் வெளியிடுகிறேன்.
நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்