ஷார்ஜா புத்தகத் திருவிழா
சென்ற ஆண்டு ஷார்ஜா சர்வதேசப் புத்தகத் திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். மாபெரும் புத்தகக் கண்காட்சியது. அதில் தமிழ் புத்தகங்கள் கிடைக்கவில்லை. தமிழ் பதிப்பாளர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்து, அது குறித்து தி இந்து நாளிதழில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதினேன்.
அதன் விளைவாக தமிழ் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான அமைப்பான பபாசி ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு முன்வந்தது.
ஷார்ஜா புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பபாசிக்கும் இடையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து உதவினேன். இருதரப்பும் இணக்கமாக செயல்பபட்டார்கள். அதன் விளைவாக இந்த ஆண்டு பபாசி மிகப்பெரிய அரங்கு ஒன்றை ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் அமைக்கிறது.
அமீகரத்தில் வாழும் தமிழ் மக்கள் தமிழ் புத்தகங்களை வாங்குவதற்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும்.
இந்த அரங்கில் 30 தமிழ் பதிப்பாளர்கள் ஒன்றிணைந்து தங்கள் புத்தகங்களை விற்பனை செய்ய இருக்கிறார்கள்.
அதில் தேசாந்திரி பதிப்பகமும் இணைந்து கொள்கிறது.
ஷார்ஜா புத்தகத்திருவிழாவில் என்னுடைய புத்தகங்கள் யாவும் பபாசி அரங்கில் விற்பனைக்கு கிடைக்கும்.
சர்வதேச புத்தகக் கண்காட்சியில் பபாசி முதன்முறையாக காலடி எடுத்து வைக்கிறது. அதற்கு என் வாழ்த்துகள்.
அரங்கு எண், வளாகம் குறித்த தகவல்களை சில நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்தக் கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் ஒரு அரங்கினை அமைக்கவுள்ளது. அவர்களுக்கும் என் வாழ்த்துகள்
••