நிவாரண உதவிகள்

கஜா புயலின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. பல்லாயிரக்கணக்கில் மரங்கள் வீழ்ந்துள்ளன. கிராமங்கள் மின்சாரமில்லாமல் இருளில் மூழ்கிப்போயுள்ளன. மக்கள் முகாம்களில் தங்க வைக்கபட்டிருக்கிறார்கள். புயலில் சிக்கி  மான்கள் இறந்து போய்கிடக்கும் புகைப்படத்தை கண்டேன். மனம் கனத்துப் போனது.
தென்னையும் வாழையும் முற்றிலும் சேதமடைந்திருக்கின்றன. வாழ்வாதரங்களை இழந்து மக்கள் பரிதவிக்கிறார்கள். எனது நண்பர்களும் வாசகர்களும் புயலால் பாதிக்கபட்ட பகுதிகளுக்கு தேவையான நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை ஒருங்கிணைத்து வருகிறேன். சமீபத்திய கேரள வெள்ளத்திற்கு பலரும் உதவிக்கரம் நீட்டியது போல இந்த நிவாரணப்பணிகளுக்கும் உதவிகள் செய்ய வேண்டும். இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும் என்கிறார்கள்.. உதவிகள் விரைந்து செய்யப்படுதல் வேண்டும்.
Archives
Calendar
December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: