புத்தாண்டு இரவு

2019 புத்தாண்டு துவங்குவதை முன்னிட்டு தேசாந்திரி பதிப்பகத்தில் வாசகர்களின் சந்திப்பு நடைபெற்றது. நிறைய இளைஞர்கள். குழந்தைகளுடன் குடும்பமாக சிலர் வந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சி தந்தது.

இலக்கியம்,  சமகாலப் பிரச்சனைகள், கல்வி, பண்பாடு, வரலாறு, சினிமா, தத்துவம் என பல்வேறு விஷயங்களைத் தொட்டு உரையாடினோம்.   இனியதாக புத்தாண்டு துவங்கியுள்ளது.  இந்த மகிழ்ச்சி எல்லோருக்கும் ஆண்டு முழுவதும் நீடிக்கட்டும்.

புத்தாண்டு துவங்கியதும் காலையில் Memories Look at Me:  Tomas Transtromer என்ற புத்தகம் படித்தேன். நோபல் பரிசு பெற்ற கவிஞரின் இளமைக்கால அனுபவங்களைப் பற்றியது.  பகலில் நிறைய நண்பர்கள் தேடிவந்து பரிசுகள் தந்தார்கள்.

மாலையில்  பிரெஞ்சு பெண் எழுத்தாளரான Colette பற்றிய திரைப்படத்தை பார்த்தேன். மிகச்சிறப்பாக உருவாக்கபட்ட படமது.

இரவு குப்ரின் எழுதிய யாமா நாவலை மீண்டும் வாசித்தேன். குப்ரின் ரஷ்ய எழுத்தாளர்களில் மிகவும் தனித்துவமானவர். அவரைப் பற்றி தமிழில் யாரும் விரிவாக எழுதவில்லை.  புதுமைப்பித்தன் அவரது நாவலை மொழியாக்கம் செய்திருக்கிறார். அது சுருக்கப்பட்ட பதிப்பு.  விரைவில் ஒரு நாள் குப்ரின் பற்றி தனி உரை ஒன்றை நிகழ்த்தலாம் என நினைக்கிறேன்.

Archives
Calendar
January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: