அக்காளின் எலும்புகள்

கவிஞர்  வெய்யில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர்.  சமகால நவீன தமிழ் கவிதையுலகில் தனித்துவமிக்க கவிதைகளை எழுதி வருபவர். அவரது சமீபத்தைய கவிதைகளின் தொகுப்பான அக்காளின் எலும்புகள் என்ற தொகுப்பை நேற்று வெளியிட்டேன்.  வடிவ ரீதியில் வெய்யில் கவிதைகள் புதிய அழகியலை உருவாக்குகின்றன . அருவெருப்பென நாம் ஒதுக்கியவற்றை பேருவுகையுடன் வெயில் ஆராதிக்கிறார். புத்துருவாக்கம் செய்கிறார். வெயிலின் கவிமொழி மரபும் நவீனமும் ஒன்றிணைந்து உருவானது.

குற்றத்தின் நறுமணம் (மு.2011) – புதுஎழுத்து பதிப்பகம்.

கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் .ஃப்ராய்ட் (டிச.2016) – மணல்வீடு பதிப்பகம்.
மகிழ்ச்சியான பன்றிக்குட்டி (டிச.2017) – கொம்பு பதிப்பகம்.
அக்காளின் எலும்புகள் (டிச.2018) – கொம்பு பதிப்பகம்
என நான்கு முக்கிய கவிதை தொகுப்புகளை வெய்யில் வெளியிட்டிருக்கிறார். அவசியம் வாசிக்க வேண்டிய கவிதைகள்.
Archives
Calendar
January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: