சிங்கிஸ் ஐத்மாத்தவ்

கிர்கிஸ்தான் சோவியத் குடியரசில் ஒன்றாக இருந்த நாடு. இதன் வடக்கில்  இந்நாட்டின் வடக்கில் கசக்கிஸ்தான், மேற்கில் உஸ்பெகிஸ்தான், தென்மேற்கில் தஜிகிஸ்தான், மற்றும் கிழக்கில் சீன மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.

கிர்கிஸ்தானின் தேசிய படைப்பாளியாக கொண்டாடப்படுகிறவர் சிங்கிஸ் ஐத்மாத்தவ். இவரது நாவல்களில் குல்சாரி, முதல் ஆசிரியர், ஜமீலா, சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று, ஒட்டகக் கண் போன்றவை தமிழில் வெளியாகியுள்ளன.

சிங்கிஸ் ஐத்மாத்தவ்(Chinghiz Aitmatov) மிகச்சிறந்த படைப்பாளி.  இவரது நாவல்கள் யாவும் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளன.

தங்கள் தேசத்தின் படைப்பாளியைக் கொண்டாடும் விதமாக கிர்கிஸ்தான் ஐத்மாத்தவ்வின் முக்கிய நாவல்களைக் குறிக்கும் தபால் தலைகளை வெளியிட்டுள்ளது. ஒரு எழுத்தாளின் முக்கிய நாவல்கள் அனைத்தும் தபால்தலைகளாக வெளியிடப்பட்டிருப்பது சிங்கிஸ் ஐத்மாத்தவிற்கு மட்டுமே நடந்துள்ளது.

பள்ளி ஆசிரியர் அனைவரும் வாசிக்க வேண்டிய இவரது நூல் முதல் ஆசிரியர்.

ஒரு மாணவர் மனதில் ஆசிரியரின் சித்திரம் எவ்வளவு  ஆழமாகப் பதிந்துள்ளது என்பதற்கு இக்கதை ஒரு எடுத்துக்காட்டு.

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: