பொன்னீலன் 80

பொன்னீலன் 80- விழா நாகர்கோவிலில் வருகின்ற 16 நவம்பர் 2019 அன்று நடைபெறுகிறது.

நான் பெரிதும் மதிக்கும் படைப்பாளி பொன்னீலன். அவர் பொதுவுடைமைச் சிந்தனையாளர் , முற்போக்கு இலக்கியத்தின் பிதாமகர். சிறந்த பேச்சாளர். பண்பாளர்.

ஊற்றில் மலர்ந்தது, கரிசல், கொள்ளைக்காரர்கள், தேடல், புதிய மொட்டுகள், புதிய தரிசனங்கள், மறுபக்கம் முதலிய நாவல்களை எழுதியிருக்கிறார்.  அடித்தள மக்களே அவரது நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள். பொன்னீலன் எழுத்தில் நையாண்டியும், கேலியும் கூர்மையான அரசியல் விமர்சனமும் தனித்துவமாக வெளிப்படுகின்றன..

குமரி மாவட்ட சமூக வரலாற்றை அறிந்துகொள்வதற்கு பொன்னீலன்  ஆற்றிய களப்பணிகள் முக்கியமானவை.

அவருடன் கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய  இலக்கிய முகாமில் ஒருமுறை கலந்து கொண்டு இரண்டு நாட்களைச் செலவழித்தது மறக்கமுடியாத அனுபவம். இளம் படைப்பாளிகளைப் பொன்னீலன்  போல உற்சாகப்படுத்துகிறவர் எவருமில்லை.

பொன்னீலன்  எழுதிய கரிசல் எனக்கு மிகவும் பிடித்த நாவல். கரிசல் நிலத்தைக் கிரா எழுதியது ஒருவிதம் என்றால் பொன்னீலன் காட்டியது இன்னொரு விதம். இருவரும் எனக்கு ஆசான்களே.

பொன்னீலன்  80 நிகழ்வில் கலந்து கொள்ளும்படி எழுத்தாளர்  ராம் தங்கம் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். முன்னதாக ஒப்புக் கொண்ட வேறு நிகழ்ச்சி இருப்பதால் கலந்து கொள்ள இயலவில்லை.

பொன்னீலனை வணங்கி அவரது ஆசி வேண்டுகிறேன்.

பொன்னீலன்  80 விழா சிறக்க எனது மனம் நிரம்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்விற்கு முக்கியக் காரணமாக உள்ள ராம் தங்கத்திற்கு என் அன்பும் பாராட்டுகளும்.

பொன்னீலன் 80  நிகழ்வில் தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்கள்  ஆளுமைகள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

•••

நிகழ்வு நடைபெறும் இடம்

சீதாலக்ஷ்மி திருமண மண்டபம்,

இருளப்ப புரம்

நாகர்கோயில்

நாள்   : நவம்பர் 16 சனிக்கிழமை.

காலை:  9 மணி முதல் மாலை 4 : 30 மணி வரை.

••

Archives
Calendar
November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
Subscribe

Enter your email address: