டெல்லி தமிழ் சங்கத்தில்
சாகித்ய அகாதமி விருது பெற்றதற்காக டெல்லி தமிழ் சங்கம் ஒரு பாராட்டு நிகழ்வை ஜனவரி 31 மாலையில் ஏற்பாடு செய்திருந்தது. நண்பர் பென்னேஸ்வரன் இதனைச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார். தலைவர் இந்துபாலா, பொதுச்செயலாளர் திரு. முகுந்தன், ஷாஜகான் உள்ளிட்ட அதன் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டார்கள். நிகழ்வில் சஞ்சாரம் குறித்த தனது பார்வைகளை பேராசிரியர் ராஜகோபால் முன்வைத்து உரையாற்றினார். திருப்புகழ் ஐஏஎஸ் அவர்கள் நிகழ்விற்குத் தலைமை வகித்தார். அரங்கு நிரம்பிய கூட்டம்.
இது போலவே தமிழ்நாடு இல்லத்திலும் பாராட்டு விழா நடைபெற்றது. திரு. முருகானந்தம் ஐஏஎஸ் அவர்கள் இதற்கு முக்கிய உறுதுணையாக இருந்தார். நிகழ்வில் திருப்புகழ் ஐஏஎஸ் கலந்து கொண்டார். இந்நிகழ்விலும் நிறைய பார்வையாளர்கள் கலந்து கொண்டார்கள்.