என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.  எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
 
     
 
 
 
 
புதிய பதிவுகள்
 
 
பிற  பதிவுகள்
 
வலை தள வாசிப்பிற்கு
 
சிறுகதைகள்
 
1.மூன்று குடும்பக் கதைகள்

2.எல்லா நாட்களையும் போல
 
கட்டுரைகள்
 
1. எனியோ மோரிகோன்

2. மேடம் பவாரி
 
முந்தைய பதிவுகள்
 

 Visitor Count
hit counters

 

புத்தகங்கள்
 
யாமம்
நாவல்
எண்ணற்ற உள் மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புத த்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையினை எழுதுகிறது. கீழத்தேய மரபின் வினோதங்கள் மிகுந்த ரகசியங்களும் மேற்குலகின் நவீனத்துவ நீரோட்டமும் ஒன்றையொன்று கடந்து செல்லும் ஒரு காலகட்டத்தை பின் புலமாகக் கொண்ட இந்நாவல் யதார்த்தம் புனைவு என்ற எல்லைகளைக் கடந்து கவித்துவத்தின் அதீத மன எழுச்சியை உருவாக்குவதுடன் அழிவுகள், வீழ்ச்சிகளுக்கு இடையேயும் பெருகும் வாழ்வின் பரவசங்களையும் மகத்துவங்களையும் விவரிக்கிறது.

வெளியீடு ; உயிர்மை பதிப்பகம

 
 
எப்போதுமிருக்கும் கதை
நேர்காணல்களின் தொகுப்பு
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு இலக்கிய இதழ்களில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பு இது. தொடரும் உரையாடலின் வழியே படைப்பிலக்கியம் குறித்தும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான அவதானிப்புகள் மற்றும் விமர்சனங்களை பகிர்ந்து கொள்கிறார். இந்த நேர்காணல்கள் படைப்பாளியின் தனிப்பட்ட பார்வைகள் என்பதைத் தாண்டி புனைக்கதை குறித்த ஆழ்ந்த விசாரணையை முன் வைக்கின்றன. புதியதொரு கதையியலை நோக்கி வாசகனை அழைத்துச் செல்லும் முனைப்பும் உலக இலக்கியத்தின் பரந்த வாசிப்பு அனுபவமும் முழுமையாக வெளிப்படுகின்றன என்பதே இந்த நேர்காணல்களின் சிறப்பம்சம்
வெளியீடு ; உயிர்மை பதிப்பகம
 
 
அயல் சினிமா
கட்டுரைகள்
உலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்நூல் கொரியா, பிரான்ஸ், ருஷ்யா, ஹாங்காங்க், மெக்சிகோ, சீனா, இத்தாலி, ஸ்பெயின், நியூசிலாந்து, அமெரிக்கா என பத்து முக்கிய தேசங்களின் இளம் இயக்குனர்களையும் அவர்களது முக்கிய திரைப் படங்களையும் ஆராய்கிறது.
சினிமா வெறும் நுகர் பொருள் என்பதைத் தாண்டி கலாச்சாரம் மற்றும் சமூக அரசியல் மாற்றங்களை நுட்பமாகப் பதிவு செய்யும் வடிவமாகத் தன்னை எப்படி உருவாக்கிக் கொள்கிறது என்பதையே இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன.சமகால உலக  சினிமாவைப் புரிந்து கொள்ளவும் தமிழ் சினிமாவில் புதிய மாற்றங்களை உருவாக்கவும் விரும்பும் அனைவருக்கும் மிக நெருக்கமானது இந்நூல்.
வெளியீடு ; உயிர்மை பதிப்பகம்
 
 
என்றார் போர்ஹே
கட்டுரைகள்

லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான ஜோர்ஜ் லூயி போர்ஹேயை அறிமுகம் செய்கிறது இந்நூல். புனைவின் எல்லையற்ற சாத்தியங்களை தனது எழுத்தில் உருவாக்கிக் காட்டிய போர்ஹே கவிதை , தத்துவம், விஞ்ஞானம், கணிதம், மெய்த்தேடல், மிகை கற்பனை என்று  பல்வேறு தளங்களிலும் இயங்கிய படைப்பாளி. நூற்றாண்டுகளாக மனித மனம் கடந்து வந்த புதிர்களும் அடைந்த எழுச்சியும் சந்தோஷமும் அற்புதமும் இவரது படைப்பின் வழியே மீள் உருவாக்கம் செய்யப் பட்டுள்ளன. இந்திய மனதோடு மிக நெருக்கமான உறவு கொண்டுள்ள போர்ஹே கீழ்திசை நாடுகளின் புனைவிலக்கியத்தின் மீது உலகின் கவனத்தைத் திருப்பியவர்.

இந் நூல் போர்ஹேயின் வாழ்வையும் புனைவையும் தமிழ் வாசகனுக்கு மிக எளிய முறையில் விவரிக்கின்றது.
வெளியீடு ; உயிர்மை பதிப்பகம்
 
கிறுகிறுவானம்
குழந்தைகளுக்கான நாவல்

சிறுவர்கள் பல நேரம் தனக்குப் பிடித்த விஷயங்களை யாரோடு பேசுவது எனப் புரியாமல் தன் நிழலோடு , ஆட்டுக்குட்டிகளோடு, அணிலோடு, ஏன் நட்சத்திரங்களோடு கூட பேசத் தொடங்கி விடுவார்கள். அப்படியொரு உரையாடல்தான் இந்தக் கதை. குழந்தைகளுக்கான இந்த நாவல் ஒரு கிராமத்து சிறுவனது பால்ய நாட்களைப் பற்றியது. அவனது பள்ளி வயது நினைவுகள் அவன் குரல் வழியாகவே சொல்லப் படுகிறது.

வெளியீடு ; பாரதி புத்தகாலயம்

 
 
பதேர் பாஞ்சாலி
நிதர்சனத்தின் பதிவுகள்
கட்டுரைகள்
ஒரு திரைப்படத்தை எப்படி அணுகுவது என்பதற்கான சில சாத்தியங்களை உருவாக்குவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். அதை நோக்கியே இந்த பதிவுகள் அமைந்திருக்கின்றன. பதேர் பாஞ்சாலி படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு உலகம் முழுவதும் சத்யஜித்ரே கௌரவிக்கப் பட்டார். அதை நினைவு கொள்ளும் விதமாகவும், ஒர் அரிய இந்திய சினிமாவைப் புரிந்து கொள்வதற்கான எனது எத்தனிப்பாகவும் இந்த நூலை கருதுகிறேன்.
 
 
அரவான்
நாடகங்கள்

இந்த நாடகங்கள் வாழ்வைத் தீவிர நிலையில் எதிர்கொள்ளும் தருணங்களின் வெளிப்பாடு. தனக்குத் தானே ஒரு மனிதன் உரையாடிக்கொள்ளும் நெருக்கடியிலிருந்துதான் நாடகம் பிறக்கிறது. அதிகார்த்தை எதிர் கொள்வதும் வரலாற்றை, கலாச்சார புனைவுகளை கட்டுடைப்பதும், மனப்பிறழ்வுகளின் மீது மையம் கொள்வதும் என இந்த நாடகங்கள் புதிய நிகழ்வெளிக்கான சாத்தியங்களை உருவாக்குகின்றன.
வெளியீடு ; உயிர்மை
 
 
இலைகளை வியக்கும் மரம்
கட்டுரைகள்

எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிக நுட்பமானவை . ஊர் சுற்றுதல், கவிதைகள், நாட்டார் இலக்கியம், இலக்கிய ஆளுமைகள், தினசரி வாழ்வின் குறிப்புகள், என்று பல்வேறு தளங்களில் இயங்கும் இந்த பதிவுகளின் அடித்தளமாக இருப்பது எதிலும் தேங்கி விடாத படைப்பாளியின் முடிவற்ற தேடல். தினசரி வாழ்வின் ஊடாக வெளிப்படும் அற்புத கணங்களை அடையாளம் காண்பதிலும், இயற்கையின் தீண்ட முடியாத தனிமையை எதிர் கொள்வதிலும் கவிதையின் ரகசியச் செயல் பாட்டிலும் அலைவு கொள்ளும் இந்தக் கட்டுரைகள் புதிய வாசிப்பு அனுபவத்தை உருவாக்கக் கூடியவை.
வெளியீடு ; உயிர்மை பதிப்பகம்
 
தேசாந்திரி
கட்டுரைகள்


பள்ளிக்கூடமும் புத்தகங்களும் வாழ்வைக் கற்றுத் தந்ததை விட அதிகமாக இயற்கை கற்றுத் தந்திருக்கிறது. என் வீட்டின் வாசலில் நிற்கும் வேம்பு தான் எனது முதல் ஆசான். ஆறுகளிடமிருந்தும, வனத்திடமிருந்தும, மலைகளிடமிருந்தும்.. ஏன் , எறும்புகளிடமிருந்தும்கூட எத்தனையோ கற்றுக் கொண்டு இருக்கிறேன். எனது பயணங்களிலிருந்து நான் கற்றுக் கொண்டும், பின்பற்றுவதும் நினைவில் வைத்திருப்பதும் குறித்த பதிவுகளே இந்தப் புத்தகம்.

வெளியீடு ; விகடன் பிரசுரம்

 
 
நடந்து செல்லும் நீரூற்று
சிறுகதை தொகுப்பு

அன்றாட வாழ்வின் சொல்லப்படாத துக்கங்களும் தொடப்படாத தனிமைகளும் இக்கதைகளை ஆற்றுப்படுத்த முடியாத கேவல்களின் சித்திரங்களாக மாற்றுகின்றன. ஆழம் காண முடியாத இருளில் உடைந்த மனோரதங்களுடன் வாழ்வைக் கடந்து செல்லும் இக்கதைகளின் பாத்திரங்கள் யார் மீதும் எந்தப் புகார்களும் கொண்டவை அல்ல. மாறாக அவை தம் மறைவிடங்களில் தீமைகளின் இடையறாத பேச்சினைக் கேட்டபடி இருக்கின்றன.
வெளியீடு ; உயிர்மைப் பதிப்பகம்
 
 
விழித்திருப்பவனின் இரவு
கட்டுரைகள்

நவீன உலக இலக்கியத்தின் வரைபடத்தை உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிர்ப்பாதைகளைப் பற்றிப் பேசுகிறது இக்கட்டுரைகள்.
இப்படைப்பாளிகள் குறித்த பொதுவான இலக்கியப் பிம்பங்களை தாண்டி அவர்களது கனவும் பைத்திய நிலையும் கொண்ட வேட்கைகளை, தேடல்களை விரிவாகப் பதிவு செய்யும் இக்கட்டுரைகள் உயிர்மை இதழில் தொடராக வெளி வந்து பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றன.
வெளியீடு ; உயிர்மை பதிப்பகம்
 
 
கதாவிலாசம்
கட்டுரைகள்

கல்வெட்டுகள், சரித்திரத்தை காலம் கடந்தும் வெளிப்படுத்திக்  கொண்டிருப்பதைப்போல வாழ்வின் சாரத்தை, கதைகள் வரிகளாக மாற்றி நம் மனதில் எழுதி விடுகின்றன. இந்தக் கதா வரிகள் காலத்தில் அழிக்க முடியாதவை. தண்ணீரைப் போல சதா ஓடிக்கொண்டே இருக்கக் கூடியவை. உடலில் மச்சத்தைப் போல கதைகளும் ஒட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. எந்த இடத்தில் எந்த வடிவில் என்பது ஒவ்வெருவரும் கண்டறிய வேண்டியது.
எனக்கு விருப்பமான சில கதைகளையும் அந்தக் கதைகளை எழுதியவர்களையும் கதைகளின் வழியே நான் அடைந்த தருணங்களையும் பகிர்ந்து கொள்ள ஏற்பட்ட ஆசையே கதாவிலாசம்
வெளியீடு ; விகடன் பிரசுரம்
 
ஏழுதலை நகரம்
சிறார் நாவல்


வயதும் படிப்பும் வளர வளர வேறு வேறு உலகங்களில் சுற்றியலைந்து ஏதோ எழுதிப் படித்து இன்று ஒரு எழுத்தாளனாக உருவாகியிருக்கிறேன். ஆனாலும் பரணில் தூக்கி எறிந்த விளையாட்டுப்  பொம்மை போல சிறு வயது கதைகள் தூசு படிந்துக் கிடப்பதை ஒரு நாளில் கண்டுணர்ந்தேன். ஒரு எழுத்தாளனாக நாவல்கள் எழுதுவது, உலக இலக்கியம் பற்றி எழுதுவது  இவை யாவையும் தாண்டி எனது பால்ய கால கதைகளின் சாலையில் கொஞ்சம் சுற்றி வர வேண்டும் என்ற ஆசை துளிர்க்கத் துவங்கியது. அப்படித்தான் இந்தக் குழந்தைகளுக்கான நாவலை எழுதத் துவங்கினேன்.

வெளியீடு ; விகடன் பிரசுரம்

 
 
உறுபசி
நாவல்
நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரத்தின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறி கவிழுந்து விடுகிறது . இப்போது அந்த சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பவத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்த சட்டகத்திலும் மாட்ட இயலாது. இந் நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனிதப் பிம்பம் நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது.
வெளியீடு ; உயிர்மை பதிப்பகம்
 
 
எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்
சிறுகதை தொகுப்பு
நவீன தமிழ் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கிய எஸ்.ராமகிருஷ்ணனின் முழுமையான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. காலத்தால் புறக்கணிக்கப்பட்டு சாம்பல் படிந்து கிடக்கும் கிராமங்களையும் நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தவர்களாக தனிமையும்
துயரமுமாக அலைவுறும் விளிம்பு நிலை மனிதர்களையும் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகள் எங்கும் காண முடிகிறது. கதை சொல்லலில் பல புதிய சாத்தியங்களை உருவாக்கும் இவரது மிகு புனைவும் கவித்துவ மொழியும் தமிழ்க் கதையாடலில் மிகத் தனித்துவமானது. ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் புதியதொரு தமிழ் புனைவியலை உருவாக்கு கின்றன என்பதே அதன் சிறப்பம்சம்.
வெளியீடு ; கிழக்கு பதிப்பகம்
 
 
உலக சினிமா
கட்டுரைகள்

சில ஆண்டுகளுக்கு முன்பாக என் நண்பரும் புனே திரைப்படக்கல்லூரியில் படித்த இயக்குனருமான சொர்ணவேலுவுடன் அவரது கிராமத்தில் தங்கியிருந்த போது பகல் முழுவதும் சினிமா பற்றிய பேச்சாகவே நீண்டது. அப்போது அவர் உலக சினிமா பற்றிய ஒரு அறிமுகப் புத்தகத்தை கொண்டு வரலாம் என்ற யோசனையைத் தெரிவித்தார். அது எனக்கும் விருப்பமானதாகவே இருந்தது. ஆனால் இதனை ஒருவர் எழுதுவதை விடவும் பல்வேறு கட்டுரைகள், நேர்முகங்கள் சிறந்த படங்கள், தேவையான தகவல்கள் என்று வரையறுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து உலக சினிமாவின் மீது ஈடுபாடு கொண்ட சில நண்பர்களை இந்தப் பணியில் இணைத்துக் கொண்டேன். இரண்டாண்டுகள் இதற்கான மொழி பெயர்ப்பும் தகவல்களும் திரட்டப் பட்டன. முடிவில் இதனை ஒருங்கிணைத்து திருத்தங்கள் செய்து கொண்டேன். இப்படித்தான் உலக சினிமா சாத்தியமாகியது.
வெளியீடு ; கனவுப் பட்டறை
 
ஆலஸின் அற்புத உலகம்
சிறுவர் நூல்


மழைத் துளியைப் போல எப்போதுமே புதிதாகயிருக்கிறது ஆலஸின் அற்புத உலகம். இது வியப்பும் மர்மமும் நிறைந்த ஒரு மாயக் கனவு. உலகின் சிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது இந் நூல். சிரித்த படியே காற்றில் மறைந்து வேடிக்கை காட்டும் செஷாயர் பூனையைப் போல வாக்கியங்களின் ஊடாக புன்னகையைத் தோன்றி மறையச் செய்வதுதான் இதன் சாதனை.

வெளியீடு ; கனவுப்பட்டறை

 
 
துணையெழுத்து
கட்டுரைகள்

ஒவ்வொரு மனிதனும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு சிறகைக் கொண்டிருக்கிறான்.
அது அவனை ஒரு வயதிலிருந்து இன்னொரு வயதிற்கு மெதுவாகக் கொண்டு செல்கிறது. துக்கத்திலிருந்து சந்தோஷத்திற்கு, அறியாமையிலிருந்து விழிப்புக்கு, அறிந்ததிலிருந்து ஞானத்திற்கு என அதன் சிறகுகள் அசைந்த படிதான் இருக்கின்றன. ஜென் கவிதையொன்றில்  மலைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன. ஆறு சலனமற்று இருக்கிறது  என்று ஒரு வரி இருக்கிறது. அதுதான் வாழ்வின் அரூபமான பயணம்.

துணையெழுத்தின் வழியாக என் வாழ்வை நானே அவிழ்த்துப் பார்த்துக்கொண்டேன்.
வெளியீடு ; விகடன் பிரசுரம்
 
 
பால்ய நதி
சிறுகதை தொகுப்பு
கதைகளிடமிருந்து தெரிந்து கொள்ள எவ்வளவோயிருக்கின்றது. பின்னிரவு நேரத்தின் நட்சத்திரங்களைப் போல எங்கோவொரு ஆழத்திலிருந்து கதைகள் மின்னிக்கொண்டிருக்கின்றன. இக்கதைகள் பெரிதும் நிலக்காட்சிகளின் மீது உருவாகியவை வெறுங்கையை மூடினாலும் திறந்தாலும் உள்ளே எதுவும் அற்று இருப்பது ஆச்சரியமில்லையா எனக்கொள்ளும் மன நிலையே இக்கதைகளை எழுதச் செய்திருக்கிறது.
வெளியீடு ; உயிர்மை
 
 
நெடுங்குருதி
நாவல்

வேம்பலையின் மீது படர்ந்திருப்பது யாராலும் தீர்க்க முடியாத சாபத்தின் துர்கனவு. தலைமுறைகளாக இக் கனவை கடந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாதைகளும் ஏக்கங்களும் நிலை கொள்ள முடியாத தத்தளிப்புகளும் ஆசா பாசங்களின் இருளும் வெளிச்சமும் இந் நாவலின் முடிவற்ற குருதிப் பெருக்காகின்றன. பொருளற்ற வாழ்வும் மரணமும் தங்கள் வசியக் குரலால் வேம்பலையை நோக்கி மனிதர்களை அழைத்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு பிரமாண்டமான கனவின் திரை மீது அறியப்படாத யதார்த்தம் ஒன்றை எழுதுகிறது இந் நாவல்.
வெளியீடு ; உயிர்மை பதிப்பகம்
 
 
வாக்கியங்களின் சாலை
கட்டுரைகள்


இந்த நூற்றாண்டின் சிறந்த படைப்பாளிகளான ஜோர்ஜ் லூயி போர்ஹே, மார்க்வெஸ், இடாலோ கால்வினோ, நபகோவ், ரில்கே, யாசுனாரி கவாபத்தா, ஹெர்மன் ஹெஸ்ஸே, காஃப்கா, லூயி பிராண்டலோ, மார்சல் புரூஸ், சி.எஸ் லூயிஸ், ஜாக் லண்டன், ஸ்டீவன் ஹாகின்ஸ், லூயி பிஷர், தார்கோவெஸ்கி, லூயி கரோல் இவர்களின் முதன்மையான புத்தகங்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கியது இந் நூல்.

வெளியீடு ; அட்சரம்

 
 
வெயிலைக் கொண்டுவாருங்கள்
சிறுகதை தொகுப்பு

பாதரசத்தைப் போல எவர் கையிலும் வசப் படாமலும் சதா அழகு காட்டி உருண்டோடியபடியுமாய் இருக்கிறது கதை என்னும் அபூர்வ திரவம். அன்றாடப் பிரச்சினைகளே கதை என்னும் காலனியக் காமாலை எங்கும் நிரம்பி வழியும் சூழலில் கதை என்பது ஒர் அறிதல் முறையெனக் கொள்ளவும பின் நவீனப் புனைவியலுக்கான கதை மொழியை உருவாக்கவும் முனையும் இக்கதைகளை அதி கதைகள் என அழைக்கலாம். புலன் சார் புனைக் கதைகளாய் இருக்கும் இந்த Modern fables தமிழில் புதிய கதையாடலை உருவாக்க முனைகின்றன.
வெளியீடு ; அடையாளம்
 
 
உப பாண்டவம்
நாவல்

இந்திய மனதின் தொன்மையான நினைவுகள் மகாபாரதத்தின் வழியே கதைகளாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த நினைவுகளின் ஊடாக மனிதர்களின் தீராத போராட்டமும் ஏக்கங்களும் பீறிடுகின்றன. காலத்தின் உதடுகள் என்றும் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் அந்த மகா காவியத்தின் இடைவெளிகளை தனது கதை சொல்லலின் வழியே புத்துருவாக்கம் செய்திருக்கிறது இந்நாவல். உப கதா பாத்திரத்திரங்களின் வழியே அறியாத கதையும் வெளிப்படுத்தப் படாத துக்கமும் புனைவுருவாக்கம் கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இது நவீன தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்க்கும் தனித்துவமான நாவலாகும்.வங்காளம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தற்போது மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
வெளியீடு ; விஜயா பதிப்பகம்
 
 
தாவரங்களின் உரையாடல்
சிறுகதை தொகுப்பு

எழுத்தின் இரு நாக்குகளான காலம், வெளி தீண்டிப் பிறந்தவை இக்கதைகள். தினசரி வாழ்வின் திரைக்குப் பின்னே நடமாடும் உருவங்கள் கண் வசமாகின்றன. யாவர் இரவிலும் பூனையாக நடமாடி அலைகிறது கனவு. வரிகளுக்கு ஊடே வாழ்வின் பேராறு நிசப்தமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வெளியீடு ; தாமரைச் செல்வி பதிப்பகம்
 
 
காட்டின் உருவம்
சிறுகதை தொகுப்பு


மூப்படைந்த, ஏற்கனவே எல்லோருக்கும் பரிச்சயமான இந்த உலகிற்கு, அதன் விந்தைக்கு, நுட்பத்திற்கு மிகத் தாமதமாக வந்த சேர்ந்தவன் நான். எனக்கு முன்பே கதை உலகு புராதனமானது. இதில் எப்போதும் சொல்பவனின் குரலோடு புதிய உருக்கொள்கின்றன கதைகள்.

இது எனது இரண்டாவது சிறுகதை தொகுதி.

வெளியீடு ; அன்னம்

 
 
வெளியில் ஒருவன்.
சிறுகதை தொகுப்பு

 

எனது முதல் சிறுகதைத் தொகுப்பு.

வெளியீடு ; சென்னை புக்ஸ்.
 
உயிர்மை

11/29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை  600018
தொலைபேசி - 91-44-24993448
e-mail uyirmai@gmail.com