கதைகள் செல்லும் பாதை

கதைகள் செல்லும் பாதை- 10

இரண்டு குற்றங்கள் போர்ஹேயின் சிறுகதைகள் சவாலானவை. குற்றவாளிகளின் உலகைப்பற்றிப் போர்ஹே நிறையக் கதைகளை எழுதியிருக்கிறார். இவரைத் தவிர வேறு எந்த இலக்கியவாதியும் இவ்வளவு குற்றப்பின்புல கதைகளை எழுதியிருப்பார்களா என்பது சந்தேகமே. A Universal History of Infamy தொகுப்பிலுள்ள கதைகள் நிஜமான குற்றவாளிகளைப் பற்றியது. அவர்களின் பெயர்கள். இடங்களை மாற்றிக் கதையாகப் போர்ஹே எழுதியிருக்கிறார். கொலை, கொள்ளை, வழிப்பறி. போதை மருந்து கடத்தல் போன்றவற்றை முதன்மையாக்கி பொழுது போக்கு எழுத்தாளர்களே அதிகம் எழுதியிருக்கிறார்கள். ஆனால் போர்ஹே அதே …

கதைகள் செல்லும் பாதை- 10 Read More »

கதைகள் செல்லும் பாதை- 9

– தலைகீழ் மாற்றம் எட்கர் கெரெட் (Etgar Keret ) இஸ்ரேல் நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1967 இல் டெல் அவிவ் நகரில் பிறந்தவர். சர்வதேசப் புகழ் பெற்ற இவரது நூல்கள் 25க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன. நியூயார்க் டைம்ஸ், கார்டியன், பாரிஸ் ரிவ்யூ இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. இவரது பசை (Crazy Glue) என்ற குறுங்கதையை வாசித்தேன். சொல்வனம் இணையஇதழில் இக்கதை மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. 420 சொற்கள் கொண்ட மிகச்சிறிய கதை.. …

கதைகள் செல்லும் பாதை- 9 Read More »

கதைகள் செல்லும் பாதை -8

அந்திச்சூரியன். காசிநாத் சிங் என்ற ஹிந்தி எழுத்தாளரின் சுகம் என்றொரு சிறுகதையை இன்று வாசித்தேன். காசிநாத் சிங் வாரணாசியில் வசித்து வருகிறார். வயது 81. காசியில் பிறந்து வளர்ந்தவர். அன்றாடம் மாலையில் இலக்கியம் பேசுவதற்கு கங்கையின் படித்துறைக்கு வந்துவிடுகிறார். சக எழுத்தாளர்கள். வாசகர்கள் என்று ஒரு குழுவே அங்கே கூடிவிடுகிறார்கள். ஒன்றாகத் தேநீர் அருந்தியபடி உலக விஷயங்கள் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். காசி நகரின் தொன்மையையும் அதன் மாற்றங்களையும் பற்றி விரிவான நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். இவரது …

கதைகள் செல்லும் பாதை -8 Read More »

கதைகள் செல்லும் பாதை- 7

அலையுடன் வாழ்வது ஆக்டோவியா பாஸ் நோபல் பரிசு பெற்ற கவிஞர். மெக்சிகத் தூதுவராக இந்தியாவில் சில ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். கன்யாகுமரி பற்றி நீள் கவிதை ஒன்றினையும் எழுதியிருக்கிறார். Alternating Current.,The Bow and the Lyre, The Siren & the Seashell and Other Essays, On Poets and Others போன்ற இவரது கவிதை குறித்த கட்டுரை நூல்கள் மிக முக்கியமானவை. ஆக்டோவியா பாஸ் சிறுகதை எழுத்தாளரும் கூட. அவரது கவிதைகளைப் போலவே குறியீட்டுத் …

கதைகள் செல்லும் பாதை- 7 Read More »

கதைகள் செல்லும் பாதை 6

தூண்டிலில் சிக்கிய நினைவுகள் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று சா. கந்தசாமி எழுதிய தக்கையின் மீது நான்கு கண்கள். மீன்பிடிக்கச் செல்லும் தாத்தாவோடு செல்லும் சிறுவனின் உலகம் அற்புதமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும். சமீபத்தில் படித்த சீனக்கதை கந்தசாமியின் சிறுகதையை நினைவுபடுத்தியது. வேறுவேறு தேசங்களில் எழுதப்பட்ட கதை. இரண்டிலும் தாத்தா கதாபாத்திரம் அற்புதமாக உருவாக்கபட்டுள்ளது. தாத்தா என்பது வெறும் சொல்லில்லை. தாத்தாவோடு பேரனுக்குள்ள உறவு என்பது தந்தையை விட நெருக்கமானது. தாத்தாக்கள் உலகை பற்றிய புதிய புரிதலை உருவாக்கிவிடுகிறார்கள். …

கதைகள் செல்லும் பாதை 6 Read More »

கதைகள் செல்லும் பாதை 5

நினைவில் கேட்கும் சங்கீதம் கவிஞர் சுகுமாரன் மொழியாக்கத்தில் வெளியான லீலை என்ற மலையாளச் சிறுகதை தொகுப்பு முக்கியமானது. சமகாலச் சிறுகதைகளில் பனிரெண்டைத் தேர்வு செய்து சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். தலைப்பு கதையான லீலை மலையாளத்தில் திரைப்படமாக வெளிவந்து பாராட்டுப் பெற்றது. இந்தத் தொகுப்பிலுள்ள கடலின் விளிம்பில் ஒரு வீடு என்ற மாதவிக்குட்டியின் கதை மிகச்சிறப்பானது. புகழ்பெற்ற ஆங்கிலக் கவியான கமலாதாஸ் தான் இந்த மாதவிக்குட்டி. இவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஆமி என்ற மலையாளப் படத்தைச் சில …

கதைகள் செல்லும் பாதை 5 Read More »

கதைகள் செல்லும் பாதை- 4

முடிவடையாத பந்தயம் அம்ப்ரோஸ் பியர்ஸ் (Ambrose Bierce )அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர். இவரது சிறுகதைகளில் ஒன்றான “An Occurrence at Owl Creek Bridge” குறும்படமாகத் தயாரிக்கபட்டு உலகப்புகழ்பெற்றுள்ளது. 1890ல் இக்கதை தமிழில் பழைய மரப்பாலத்தில் ஒரு சம்பவம் என மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. பியர்ஸ் ராணுவத்தில் பணியாற்றியவர். சில காலம் பத்திரிக்கையாளராக இருந்திருக்கிறார். தீவிரமான சமூக விமர்சனக்கட்டுரைகளை எழுதியதற்காக இவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். 1913 இல் தனது 71 வயதில் பியர்ஸ் லூசியானா மற்றும் டெக்சாஸ் …

கதைகள் செல்லும் பாதை- 4 Read More »

கதைகள் செல்லும் பாதை- 3

இல்லாத கண்கள் ரஸ்கின் பாண்ட் இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். குழந்தைகளுக்காக நிறைய எழுதியிருக்கிறார். 1992ல் Our trees still grow in Tehra என்ற நூலிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார் ரஸ்கின் பாண்ட் இமாச்சலப் பிரதேசத்தில் கசோலி என்ற இடத்தில் பிறந்தார். அவரது தந்தை ஆப்ரி அலெக்சாண்டர் பாண்ட் இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டீஷ் வான்படையில் பணியாற்றினார். ரஸ்கின் பாண்ட் குஜராத்தின் ஜாம்நகரிலும்,டேராடூனிலும், ஷிம்லாவிலும் வளர்ந்தார். குழந்தைகளுக்காக முப்பது நூல்கள் எழுதி உள்ளார். …

கதைகள் செல்லும் பாதை- 3 Read More »

கதைகள் செல்லும் பாதை- 2

கால் நகங்கள் “காலில் நகங்கள் எதற்காகப் படைக்கபட்டிருக்கின்றன. அதனால் என்ன பிரயோசனம் ?“ என ஒரு சிறுமி தனது தாயிடம் கேட்கிறாள் “கடவுளின் படைப்பில் எல்லாவற்றுக்கும் ஒரு தேவையும் அவசியமும் இருக்கிறது. நமக்குத் தான் கால்நகங்களைப் பயன்படுத்த தெரியவில்லை“ என்று அந்தப் பெண்ணின் தாய் சொல்கிறாள் இப்படியொரு உரையாடலை யூத எழுத்தாளரான வெல்வ் செர்னின் நாவலில் கண்டேன். கால்நகங்களைப் பற்றி நம்மில் பெரும்பான்மையினர் கவனம் கொள்வதேயில்லை ஆனால் தன்னைக் கவனிக்கத் துவங்குவது கால்களில் இருந்தே துவங்குகிறது என்கிறாள் …

கதைகள் செல்லும் பாதை- 2 Read More »

கதைகள் செல்லும் பாதை 1

பயமும் காமமும் அருண் ஜோஷி (arun joshi) சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளர். பனாரஸ் பல்கலைகழகத் துணைவேந்தர் ஜோஷியின் மகனாக, காசியில் பிறந்த இவர் அமெரிக்காவில் பட்டபடிப்பு படித்திருக்கிறார். 1961ல் இந்தியா திரும்பி புகழ்பெற்ற நூற்பாலை ஒன்றின் நிர்வாகியாகப் பணியாற்றியிருக்கிறார். பின்பு டெல்லியிலுள்ள ஸ்ரீராம் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனராகப் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். இவரது முதல் நாவல் The Foreigner 1968ல் வெளியானது. அதைத் தொடர்ந்து The Strange Case of Billy …

கதைகள் செல்லும் பாதை 1 Read More »