என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.  எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
 
     
 
 
 
 
புதிய பதிவுகள்
 
 
பிற  பதிவுகள்
 
வலை தள வாசிப்பிற்கு
 
சிறுகதைகள்
 
1.மூன்று குடும்பக் கதைகள்

2.எல்லா நாட்களையும் போல
 
கட்டுரைகள்
 
1. எனியோ மோரிகோன்

2. மேடம் பவாரி
 
முந்தைய பதிவுகள்
 

 Visitor Count
hit counters

 

 
  நன்றி.
      

இன்று மாலை எனது  நான்கு புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதற்கு வந்து சிறப்பித்த வாசகர்கள், நண்பர்கள், வலைப்பதிவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றி.


நேற்று நண்பர் சாருநிவேதிதாவின் புத்தக வெளியீட்டிற்கு வந்தது போலவே இன்றும் நல்ல கூட்டம். இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக புத்தக வெளியீட்டு விழாவிற்கு திரளாக வாசகர்கள் வந்து கலந்து கொள்வது மிகுந்த சந்தோஷம் தருவதாக இருந்தது. இன்றும் பலர் உட்கார இருக்கையின்றி கடைசி வரை நின்றபடியே  பேச்சை  கேட்டுக் கொண்டு இருந்தார்கள். இந்த அக்கறையும் அன்புமே நான் தொடர்ந்து எழுதுவதற்கு உண்மையான உந்துதலாக இருக்கிறது.


மேடையில் செய்யத் தவறிய ஒன்று நினைவிற்கு வந்தது. அதற்காக முதலில் மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய புத்தகங்களை ஆகச்சிறப்பாக உருவாக்கிய உயிர்மை பதிப்பகத்தின்  செல்வி, உமா, லாவண்யா, சிவன், பாண்டியன், ஜெயக்குமார். தனசேகர், கதிர், வேல்முருகன், ராஜேந்திரன்   மற்றும் அதை அச்சிட்ட மணி ஆப்செட் ஊழியர்கள், பைண்டர்கள், லேமினேஷன் செய்வதர்கள் அத்தனை பேருக்கும்  என் மனம் நிறைந்த அன்பும் நன்றியும் உரியது.


என் தொடர்ந்த இலக்கிய செயல்பாடுகளுக்கு நண்பர் மனுஷ்யபுத்திரன் காட்டும் அன்பும் அக்கறையுமே முக்கிய தூண்டுதலாக  உள்ளது. அவரது நேசம்  நன்றிக்கு அப்பாற்பட்ட உன்னதம்.. உயிர்மையின் வளர்ச்சி மற்றும்  அக்கறைகளில் என்றைக்கும் நான் உடன் இருப்பேன். உயிர்மை சமகால தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் அடையாளமாக வளர்ந்து நிற்பது மிகுந்த பெருமைக்குரியதாக உள்ளது.


என் அழைப்பை ஏற்று விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், பேச்சாளர்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏதேதோ தேசங்களில் இருந்து எனது புத்தக வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்து சொன்ன வாசகர்கள், நண்பர்களுக்கு  மனம் ததும்பும் நன்றி.

இந்த புத்தகங்களை இணையத்தில் வாங்க விரும்புகின்றவர்கள்

www.uyirmmai.com      அணுகவும்.


சனிக்கிழமை மாலை நடைபெற்ற சாருவின் புத்தக வெளியீட்டு விழா எனக்கு மிகவும் பிடித்த நிகழ்வாக அமைந்திருந்தது. அத்துடன் மழையோடு கூடிய இரவில் சாருவின் நண்பர்கள் மற்றும் வாசர்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக இருந்தது. இதற்காக சாருவிற்கு மனம் நிறைந்த நன்றி.

***