என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.  எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
 
     
 
 
 
 
புதிய பதிவுகள்
 
 
பிற  பதிவுகள்
 
வலை தள வாசிப்பிற்கு
 
சிறுகதைகள்
 
1.மூன்று குடும்பக் கதைகள்

2.எல்லா நாட்களையும் போல
 
கட்டுரைகள்
 
1. எனியோ மோரிகோன்

2. மேடம் பவாரி
 
முந்தைய பதிவுகள்
 

 Visitor Count
hit counters

 

 
  விக்ரமாதித்யன்
      

தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்களுள் ஒருவரான விக்ரமாதித்யனுக்கு இந்த ஆண்டிற்கான "விளக்கு' இலக்கிய விருது கிடைத்திருக்கிறது.

அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் கலாசார அமைப்பான "விளக்கு' புதுமைப்பித்தன் நினைவாகத் தமிழின் சிறந்த படைப்பிலக்கியவாதிகளுக்கு ஒவ்வோராண்டும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. 2008 ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது. இந்தவிருதில் ரூ.40 ஆயிரம் ரொக்கப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் அடங்கும்.

62 வயதான கவிஞர் விக்ரமாதித்யன் "ஆகாசம் நீல நிறம்', "ஊரும் காலம்', "உள்வாங்கும் உலகம்' உள்ளிட்ட 16 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், 7 கட்டுரைத் தொகுப்புகளும் வெளியாகி உள்ளன

அண்ணாச்சி விக்ரமாதித்யனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்