என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.  எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
 
     
 
 
 
 
புதிய பதிவுகள்
 
 
பிற  பதிவுகள்
 
வலை தள வாசிப்பிற்கு
 
சிறுகதைகள்
 
1.மூன்று குடும்பக் கதைகள்

2.எல்லா நாட்களையும் போல
 
கட்டுரைகள்
 
1. எனியோ மோரிகோன்

2. மேடம் பவாரி
 
முந்தைய பதிவுகள்
 

 Visitor Count
hit counters

 

 
  அறிவிப்புகள்
      


இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சி சிறப்பாக துவங்கியுள்ளது. டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடைபெறுகிறது.  தினமும் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறுகிறது. விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கு துவங்குகிறது


ஜனவரி 4 ம் தேதி மாலை 6 மணிக்கு புத்தக கண்காட்சியின் உள்ளே தமிழ் படைப்புலகம் என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறேன். 


முன்னதாக அன்று மாலை 5 மணிக்கு நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஒரான் பாமுக்கின் என் பெயர் சிவப்பு என்ற நாவலின் மொழிபெயர்ப்பு வெளியீட்டு நிகழ்ச்சி புத்தக கண்காட்சியின் உள்ளே காலச்சுவடு பதிப்பகத்தில் நடைபெறுகிறது. இந்த நாவலை ஜி. குப்புசாமி சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். அந்த நூலை வெளியிட்டு ஒரான் பாமுக் பற்றி சிறிய அறிமுக உரை ஒன்றை நிகழ்த்தஇருக்கிறேன்.


என்னைச் சந்திக்க விரும்பும் வாசகர்கள்,  நண்பர்கள், ஜனவரி 2 முதல் 8 வரை தினமும் மாலை 5 மணி முதல் எட்டு மணி வரை புத்தக கண்காட்சியில் உள்ள உயிர்மை கடை எண் p12 ல் சந்திக்கலாம்.  புதிய புத்தகங்களில் கையெழுத்து பெற்றுக் கொள்ளலாம்.


எனது  புத்தகங்கள் துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி. ஏழுதலை நகரம், கேள்விக்குறி ஆகியவை ஆனந்த விகடன் கடையிலும், உப பாண்டவம், ஆதலினால், ஆலீஸின் அற்புத உலகம் ஆகிய மூன்றும் விஜயா பதிப்பக கடையிலும் கிடைக்கின்றன.


இந்த ஆண்டு வெளியான எனது நான்கு புதிய புத்தகங்கள் மற்றும் எனது முந்தைய நூல்கள் யாவும் உயிர்மை கடையில் கிடைக்கிறது.