மகாபாரதத்தின் களப்பலியான அரவான் கதாபாத்திரத்தை புதிய கண்ணோட்டத்தில் விவரிக்கும் இந்த நாடகம் மூன்றாம் அரங்கு நாடக குழுவினரால் நிகழ்த்தப் பட்டது. ஒரு நபர் நடிக்கும் இந் நாடகம் அதன் கவித்துவமான மொழி மற்றும் படிமங்களால் மிகுந்த கவனம் பெற்றது. கருணா பிரசாத் இதை இயக்கி நடித்திருக்கிறார். இருபதுக்கும் மேற்பட்ட முறை இந் நாடகம் மேடை ஏற்றப் பட்டுள்ளது. அரவான் நாடகப் பிரதி தமிழக அரசின் 2006 ஆம் ஆண்டின் சிறந்த நாடக நூலாகப் பரிசு பெற்றுள்ளது.
|