என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.  எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
 
     
 
 
 
 
புதிய பதிவுகள்
 
       Subscribe to site feed
 
பிற  பதிவுகள்
 
வலை தள வாசிப்பிற்கு
 
சிறுகதைகள்
 
1.மூன்று குடும்பக் கதைகள்

2.எல்லா நாட்களையும் போல
 
கட்டுரைகள்
 
1. எனியோ மோரிகோன்

2. மேடம் பவாரி
 
முந்தைய பதிவுகள்
 

 Visitor Count
hit counters

 

 
  இணைய கிருமி
      


நேற்றிரவு எனது நண்பர் தொலைபேசியில் அழைத்து உங்கள் இணையம் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. யாரோ விஷமிகள் இதை செய்திருக்கிறார்கள். உடனே சரி செய்யுங்கள் என்றார். மனம் உடைந்து போய்விட்டேன்.  இரண்டு ஆண்டு உழைப்பு மற்றும் எனது அன்றாட தொடர்பு அத்தனையும் நாசமாக்கபட்ட வலியில் தூக்கமில்லை


இணையத்தில் இப்படியான விஷக்கிருமிகள் பரவியிருப்பது எத்தனை ஆபத்தானது.. அத்துடன் என் இணையத்தை தொடர்பு கொள்ளும் பலரும் தொலைபேசியில் அழைத்து விசாரிக்க துவங்கியிருந்தார்கள்
எனக்கு இணைய தொழில் நுட்பம் எதுவும் தெரியாது. எனது இணைய முகப்பில் வைரஸ் ஒன்றை புகுத்தி உள்ளீடுகளை தகர்த்திருக்கிறார்கள் என்கிறார்கள்.

இன்று எனது வலைத்ளத்தின் நிர்வாக நண்பர்கள் போராடி கொஞ்சம் சரிசெய்திருக்கிறார்கள். முழுதாக மீட்பதற்கு ஒரு நாள் ஆக கூடும்