அரூ சிறப்பிதழ்

சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் அரூ இணைய இதழ் எனது விரிவான நேர்காணலை வெளியிட்டுள்ளது. அத்தோடு எனது படைப்புகள் குறித்த கட்டுரைகளைக் கொண்ட சிறப்பு பகுதியும் வெளியிட்டுள்ளது. இந்தச் சிறப்பிதழை முன்னெடுத்த அரூ நண்பர்களுக்கும் கட்டுரையாளர்கள் பிருந்தா சாரதி, பு. பிரியதர்சினி, ராம் தங்கம் ,வினோத், கணேஷ் பாபுக்கும் எனது மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு நேர்காணலை எடுப்பதற்காக ஆறு மாதங்களுக்கும் மேலாக எனது புத்தகங்களைப் படித்து கேள்விகளைத் தயாரித்து தொகுத்து அனுப்பி வைத்தார்கள். பதில்கள் கிடைத்தவுடன் மறுபடியும் துணைக்கேள்விகள் வந்தன. அவற்றுக்கும் பதில் எழுதினேன். முழு நேர்காணைலையும் உரிய முறையில் எடிட் செய்து சிறப்பாக வெளியிட்டிருக்கிறார்கள் . இந்த உழைப்பும் ஆர்வமும் பாராட்டுக்குரியது. இது போலவே எனது படைப்புகளை முழுமையாகப் படித்து உரிய கட்டுரையாளர்களை அணுகி கட்டுரைகள் பெற்றிருக்கிறார்கள். பெருந்தொற்றுக் காலம் என்பதால் பலரால் எழுத இயலாமல் போய்விட்டது. மிகுந்த ஈடுபாட்டுடன் இணைய இதழை நடத்தி வரும் ராம், பாலா, சுஜா. கணேஷ்பாபு மற்றும் நண்பர்கள் அனைவரையும் மனம் நிறையப் பாராட்டுகிறேன்.

இணைப்பு

அரூ இணைய இதழ்
0Shares
0