அழைப்பிதழ்

என் விருப்பத்திற்குரிய சிறுகதை ஆசிரியரான ஆன்டன் செகாவின் முக்கியச் சிறுகதைகள் குறித்து விரிவான உரை ஒன்றை நிகழ்த்த இருக்கிறேன்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் ஆன்டன் செகாவ் குறித்து ஒரு உரை நிகழ்த்தினேன். LLA நூலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

அதன்பிறகு செகாவ் வாழ்கிறார். மற்றும் செகாவின் மீது பனி பெய்து கொண்டிருக்கிறது என்ற இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன். இதில் செகாவ் வாழ்கிறார் அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூல்.  இரண்டும் தேசாந்திரி பதிப்பக வெளியீடாக வந்துள்ளன.

28.4.2019 அன்று மாலை ஆறுமணிக்கு கவிக்கோ மன்றத்தில் செகாவ் சிறுகதைகள் குறித்த உரையை நிகழ்த்துகிறேன்.

இந்நிகழ்வில்  அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.

••

0Shares
0