ஆங்கிலத்தில்

எனது சிறுகதை இயல்பு பாண்டிச்சேரியை சேர்ந்த வெங்கட சுப்பாராய நாயகர் மொழியாக்கத்தில் “Transfire” ஆங்கில இதழில் வெளியாகி உள்ளது

“Transfire”  (7th Issue), April-June2013 .

•••

கோவை நிர்மலா பெண்கள் கல்லூரி தமிழ் துறையில் எனது சிறுகதை ஒலைக்கிளி இளங்கலை மாணவர்களுக்கு பாடமாக வைக்கபட்டுள்ளது

•••

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் எம்ஏ தமிழ் மாணவர்களுக்கு எனது நாவல் யாமம் பாடமாக வைக்கபட்டுள்ளது

•••

ஆசிய நாடுகளின் சிறந்த சிறுகதைகள் 40 அடங்கிய தொகைநூல் ஒன்றினை Mark Thompson தொகுக்கிறார், அந்த தொகுப்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கதைகளில் ஒன்றாக குதிரைகள் பேச மறுக்கின்றன என்ற எனது சிறுகதை இடம்பெற்றுள்ளது

•••

Alice in Wonderland வெளியாகி 150 ஆண்டுகள் ஆனதை ஒட்டி அதன் பல்வேறு மொழிபெயர்ப்புகள் பற்றிய ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன, இதில் back translation செய்வதற்கு நான் தமிழில் மொழியாக்கம் செய்துள்ள ஆலிஸின் அற்புத உலகம் தேர்வு செய்யப்பட்டு, அதன் ஒரு அத்தியாயம் மறுமொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, இதனை ஒருங்கிணைத்து மொழியாக்கம் செய்திருப்பவர் ஆங்கிலப் பேராசிரியர் அழகரசன்

•••

எனது நாடகம் அரவான் மற்றும் உருளும்பாறைகள் இரண்டும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு  ஸ்டெல்லா மேரி பெண்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிப்பவர்களுக்கான பாடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது

•••

நான் புதிதாக எழுதியுள்ள சிந்துபாத்தின் மனைவி என்ற நாடகம் ஜெயராவ் இயக்கத்தில் தியேட்டர் லேப் குழுவினர்களால் விரைவில் நிகழ்த்தபட உள்ளது, அதற்கான முழுஒத்திகை இப்போது நடைபெற்று வருகிறது

•••

0Shares
0