ஆவநாழி

ஆவநாழிஎன்ற இணைய இதழை கவிஞர் சுதேசமித்ரன் நடத்தி வருகிறார். முன்பு ஆரண்யம் என்ற கலை இலக்கிய இதழை ஸ்ரீபதி பத்மநாபாவோடு இணைந்து கொண்டுவந்திருக்கிறார்., நான்கு இதழ்கள் வெளியாகியுள்ளன.

இலக்கியம் சினிமா கலை என தீவிரமான கட்டுரைகள் நேர்காணல்களுடன் மிகச்சிறப்பான வடிவமைப்புடன் வெளியானது. சத்யஜித்ரேவின் பதேர் பாஞ்சாலி, பத்மராஜனின் ஓரிடத்தொரு பயில்வான், எம் டி வாசுதேவன் நாயரின் பெருந்தச்சன் மற்றும் ஷேக்ஸ்பியர் இன் லவ் ஆகிய படங்களின் முழுமையான திரைக்கதைகள் அதில் வெளியாகியிருந்ததை மறக்கமுடியாது.

சுதேசமித்ரன் சிறந்த வடிவமைப்பாளர் என்பதால் ஆவநாழி இதழ் அதன் வடிவமைப்பில் மிகச்சிறப்பாக உள்ளது.

இந்த இதழில் மூன்று ஆளுமைகள் என்ற தலைப்பில் நான், ஜெயமோகன். சாருநிவேதிதா ஆகிய மூவரையும் பற்றி மூன்று கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறார்கள் என்னைப் பற்றிய கட்டுரையை பிறைசூடி இளஞ்செழியன் எழுதியிருக்கிறார்.

அவரைப் போன்ற இளம்வாசகர்களின் அன்பும் நேசமும் தான் என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது.

அழகான புகைப்படங்களை எடுத்துத் தந்த நண்பர் புதுவை இளவேனிலுக்கு அன்பும் நன்றியும்

ஆவநாழிக்கு என் வாழ்த்துகள்
••

0Shares
0