இரண்டு ஆவணப்படங்கள்

மலையாளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான வைக்கம் முகமது பஷீர் குறித்த ஆவணப்படம். பஷீரின் கதைகள் மக்களிடம் எவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அழகாக எடுத்துக்காட்டுகிறது. பஷீரின் வீடு. அவரது மனைவியின் நேர்காணல், பஷீர் குறித்த நாடகம் என நல்லதொரு அனுபவத்தைத் தருகிறது இந்த ஆவணப்படம்

My Name Is Basheer

https://youtu.be/9-Tm24XRRCE

•••

குஞ்ஞுண்ணி  மலையாளத்தின் முக்கியக் கவிஞர். கோழிக்கோடு இராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். சின்னஞ்சிறிய கவிதைகளின் மூலம்  அற்புதமான கவித்துவ அனுபவங்களை வெளிப்படுத்தியவர். அவரது கவிதைகளை பேராசிரியர் ஆனந்தகுமார் மற்றும் ஸ்ரீபதி பத்மநாபா இருவரும் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.

குஞ்ஞுண்ணி மாஷ் குறித்த ஆவணப்படம்.

ORMAKALILE IRIPPIDANGAL | KUNJUNNI MASH | DOCUMENTARY

https://youtu.be/gib-oFKXFd8

••

0Shares
0