இலக்கிய முகாம்

இலக்கிய வாசிப்பினை பரவலாக்கவும், உலக அளவிலான இலக்கியப்போக்குகள் , தமிழின் இன்றைய எழுத்துலகம் மற்றும் புதிய படைப்பாளிகள் குறித்து கவனம் கொள்ளவும் இந்த ஆண்டு ஐந்து இலக்கிய முகாம்களை நடத்த திட்டமிட்டிருக்கிறேன் .

இதன் முதல்முகாம் கதைகள் பேசுவோம், சென்னையில் நடைபெறுகிறது, இது சிறுகதைகளுக்கானது, மார்ச் 23 ஞாயிறு அன்று நடைபெறுகிறது,

அடுத்த முகாம் மே மாதம் மதுரையில் நடைபெற்ற உள்ளது ,அது நாவலுக்கான முகாம்,

மூன்றாவது முகாம் ஆகஸ்ட் மாதம் கவிதைகள் குறித்து ஏலகிரியில் நடைபெற உள்ளது,

நான்காவது முகாம் அக்டோபரில் திருச்சியில் நடைபெற உள்ளது ,அது மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றியது

ஐந்தாவது முகாம் பயண இலக்கியம் பற்றியது, டிசம்பரில் கோவையில் நடைபெறுகிறது,.

இந்த ஐந்து முகாம்களும் இயற்கையான சூழலில் நடைபெற உள்ளன

•••

மார்ச் 23ம் தேதி ஞாயிறு, அன்று நடைபெற உள்ள கதைகள் பேசுவோம் இலக்கிய முகாமினை டிஸ்கவரி புக் பேலஸ் ஒருங்கிணைப்புச் செய்கிறது.

காலை 9.30 மணிக்கு துவங்கி மாலை 5.30 வரை முகாம் நடைபெற உள்ளது

இம் முகாம் திருக்கழுக்குன்றத்தை அடுத்தத் தண்டரை கிராமத்தில் உள்ள இருளர் பழங்குடி பெண்கள் நல அமைப்பின் வளாகத்தில் நடைபெற உள்ளது

இது இயற்கையான வனச்சூழலில் அமைந்துள்ள இடமாகும்,

இம் முகாமில் தற்காலச் சிறுகதைப்போக்குகள், உலகின் சிறந்த சிறுகதைகள், கதையெழுதும் கலை குறித்த உரைகளும் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது

இம் முகாமின் சிறப்பு நிகழ்வாக நான் தொகுத்த நூறு சிறந்த கதைகள் நூலின் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது

நூலை இயக்குனர் சசி வெளியிடுகிறார், முதற்பிரதியை பேராசிரியர் ராமகுருநாதன் பெற்றுக் கொள்கிறார்.

தமிழின் முக்கிய எழுத்தாளர்கள், விமர்சகர்கள், இணைய எழுத்தாளர்கள் பலரும் இந்த முகாமில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்

டிஸ்கவரி புக் பேலஸில் இருந்து தண்டரை வரை போய்த் திரும்பி வருவதற்கு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மதிய உணவும் வழங்கபட இருக்கிறது.

முன்பதிவு செய்து கொள்கிறவர் மட்டுமே இம் முகாமில் கலந்து கொள்ள முடியும்

இதற்கான பதிவு கட்டணம் ரூ 200. ( தேநீர், மதிய உணவு மற்றும் வாகன கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்கானது)

முன்பதிவு செய்து கொள்ளக் கடைசி நாள் : மார்ச் 19.

தொடர்புக்கு

வேடியப்பன்

தொலை பேசி எண் : Ph”+91 44 65157525 , Cell +91 9940446650

டிஸ்கவரி புக் பேலஸ்,

எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,

சென்னை – 600078.

****

0Shares
0