சியோ ஜியோங்-ஜூ கொரியாவின் முக்கிய கவிஞர். (Seo Jeong-ju) ஐந்து முறை நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர், மிதாங் என்ற புனைபெயரில் எழுதியிருக்கிறார். பதினைந்து கவிதை தொகுதிகள் வெளியாகியுள்ளன. கொரிய நவீன கவிதையின் தந்தையாக கருதப்படுகிறார். கவிதைகள் குறித்து சிறப்பாக உரைகளையும் ஆற்றியிருக்கிறார். இவரது Poems of a Wanderer தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அற்புதமான கவிதைகள். தமிழில் இவரது கவிதைகள் ஏதும் வெளியாகியுள்ளதாக தெரியவில்லை. சங்க தமிழ் கவிதையின் சாயலை இவரிடம் காணமுடிகிறது. குறிப்பாக இயற்கையின் அழகை எழுதும் விதம் அபாரமாகவுள்ளது. ரத்தமும் பனித்துளியும் ஒன்று சேர்ந்தது என் கவிதை என்று கூறுகிறார். பாட்டியால் வளர்க்கபட்டவர் என்பதால் கதைகளை நிறைய தெரிந்து கொண்டிருக்கிறார். தொழுநோயாளிகள் மீது பரிவும் அன்பும் கொண்ட சியோ ஜியோங்-ஜூ அவர்களின் வேதனைகளை கவிதைகளாக எழுதியிருக்கிறார். அக்கவிதைகள் கொரிய இலக்கியத்தில் தனித்துவமிக்கதாக கொண்டாடப்படுகின்றன
பிரிவின் துயரைப் பேசும் இக்கவிதை சங்க கவிதையின் சாயலில் இருப்பதை பாருங்கள்.
Chunhyang’s Last Words
•••
சியோ ஜியோங்-ஜூவின் புகழ்பெற்ற இக்கவிதை செவ்வந்தி மலரை தனது சகோதரியாகச் சுட்டுகிறது
••
Beside a Chrysanthemum by Seo Jung-ju
Perhaps
to make a Chrysanthemum bloom,
the owl must have cried since spring.
Perhaps
to make a Chrysanthemum bloom,
the thunder must have cried in the dark clouds.
Oh, Chrysanthemum, looking like my elder sister,
who stands in front of her mirror
after a long journey through the back alleys of her youth,
her heart tightened by her longings and regrets.
Perhaps
to make your yellow petals bloom
the first frost must have fallen last night.
I could not sleep.
•••