நேற்று பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையின் குறும்பட போட்டியின் துவக்கவிழாவில் கலந்து கொண்டேன். இதனை ஒருங்கிணைத்த பிரின்ஸ் பெரியார் இயக்கத்தின் துடிப்புமிக்க இளம்தலைமுறை தோழர்.சென்னை திரைப்படக்கல்லூரியில் பயின்றவர்.
இந்த திரையிடல் நிகழ்விற்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட குறும்பட இயக்குனர்கள் வந்திருந்தார்கள். நூறு குறும்படங்களுக்கு மேலாகவே போட்டிக்கு வந்திருந்தன. தமிழில் இவ்வளவு குறும்படங்கள் உருவாக்கபடுவது மிக ஆரோக்கியமான வளர்ச்சியாகும். இதன்வழியே மாற்றுசினிமா முயற்சிக்கான புதிய களம் உருவாகி வருவதை அறிய முடிகிறது.
தேர்ந்த தொழில்நுட்பம், கதைக்கரு, மிகையில்லாத நடிப்பு என்று தமிழ் குறும்படங்கள் அதன் அமெச்சூர் தன்மைகளை கடந்து இன்று முழுமையாக பரிமளிக்க துவங்கியிருக்கிறது. வளர்ந்து வரும் குறும்பட இயக்குனர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த அன்பும் வாழ்த்துகளும்.
சமீபத்தில் இணையத்தில் நான் பார்த்த சில குறும்படங்களின் இணைப்புகள் இவை.
இவை ஒவ்வொன்றும் மிக தனித்துவமானவை. திரைப்பட விழாக்களில் முக்கிய விருது பெற்றவை. குறும்படங்கள் எவ்வளவு வலிமையானவை என்பதற்கு இந்த படங்கள் எடுத்துக்காட்டு. இதில் தி ஸ்டோரி ஆப் சைன் படத்தை மட்டும் நான் பத்து தடவைகளுக்கு மேலாக பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் அது சரியான வார்த்தை வாழ்வில் எவ்வளவு மாற்றத்தை உருவாக்கும் என்பதை உணர செய்கிறது.
இணைப்புகள்
1) The Story of a Sign
https://www.youtube.com/watch?v=4-K8bpoDn-8
2)Wind – Hungarian Winners of Palme d`Or special category.
https://www.daazo.com/film/468e3d10-910c-102c-a455-000e2e531ae0/
3)After Rain Best Short Film in 2002
https://www.daazo.com/film/5e922afe-910a-102c-a455-000e2e531ae0/
4)Haircut
https://www.spike.com/video/haircut/2930764
5)Ten Minutes Ahmed Imamovic – BEST SHORT FILM IN EUROPE
https://www.youtube.com/watch?v=ppAn0LNU_V8
https://www.youtube.com/watch?v=AiCw8V_pF9o
7) Snap (award winning short film)