கடந்த நான்கு நாட்களாக உடல்நலக்குறைவு. ஒய்வில் இருக்கிறேன். படுக்கை. மருந்துகள். பாதி நேர உறக்கம் என்று பகலும் இரவும் கடந்து போகின்றன. தொடர்ந்த மழை சப்தம் ஜன்னலின் வழியே கேட்டுக் கொண்டிருக்கிறது
**
சென்ற வாரம் தேவதச்சனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு விசயம் மனதில் ஒடிக் கொண்டேயிருக்கிறது.
நடந்து திரிய வேண்டிய அவசியமற்று போனவவைகளுக்கு தான் கண் உருவாகமால் போயிருக்கிறது. அதனால் தான் மரங்களுக்கு கண் இல்லையோ?
**
சார்லஸ் சிமிக் என்ற அமெரிக்க கவியை தொடர்ந்து வாசித்து வருகிறேன். மிக அற்புதமான கவிஞர். பல முக்கிய விருதுகளை பெற்றிருக்கிறார். 36 கவிதை தொகுதிகள் வெளியாகி உள்ளன.
Charles Simic
Watermelons
Green Buddhas
On the fruit stand.
We eat the smile
And spit out the teeth.
***