தமிழ் ஸ்டுடியோ இணைய தளத்தில் கதை சொல்லி என்ற புதிய பகுதி செயல்பட்டு வருகிறது, இதில் ஒவ்வொரு எழுத்தாளரும் தனக்குப் பிடித்தமான இரண்டு கதைகளை அவர்களது குரலில் பேசிப் பதிவு செய்து வருகிறார்கள், மிகுந்த பாராட்டிற்கு உரிய முயற்சியது
இதில் எனது நண்பரும் தமிழின் முக்கிய கவிஞருமான மனுஷ்யபுத்திரன் தனக்குப் பிடித்த கதையாக எனது மிருகத்தனம் என்ற சிறுகதையைச் சொல்லியிருக்கிறார், மிக நன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவருக்கும் தமிழ் ஸ்டுடியோ நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
நீங்களும் கேட்டு மகிழுங்கள்
https://koodu.thamizhstudio.com/kadhaisolli_8.php
(கதைத் தலைப்பின் கீழே உள்ள பிளேயரைச் சொடுக்கினால் கதையைக் கேட்க துவங்கலாம்)