கனலி இணையதளத்தின் துவக்கவிழா சிறப்பாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு குட்டி இளவரசனுடன் ஒரு பயணம் என்ற தலைப்பில் உரையாற்றினேன். விக்னேஷ்வரன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. நேற்று சித்துராஜ் பொன்ராஜ் முரகாமி பற்றி ஆற்றிய உரை மிகச்சிறப்பானது. அழகிய புகைப்படங்களை எடுத்த பாலமுரளிக்கும் நிகழ்வை ஒளிப்பதிவு செய்த ஷ்ருதி டிவிக்கும் நன்றி
நண்பர் வேலூர் லிங்கன் நிகழ்விற்கு வந்திருந்தது கூடுதல் மகிழ்ச்சி. அவரது நேர்காணல் கனலியில் வெளியாகியுள்ளது. அவசியம் வாசிக்கவும்.
https://www.youtube.com/watch?v=H7I5mAvUKDg&feature=em-uploademail
இணையதள முகவரி
01.09.2019