கனலி ஜப்பானிய சிறப்பிதழ்

இந்த ஆண்டிற்கான எனது புதிய புத்தகங்களின் தயாரிப்புப் பணிகள் காரணமாக இணையத்தில் வெளியாகும் இதழ்களைப் படிக்க நேரம் கிடைப்பதில்லை.

கனலி இணைய இதழ் வெளியிட்டுள்ள ஜப்பானியச் சிறப்பிதழைத் தினமும் ஒன்றிரண்டு எனக் கடந்த பத்து நாட்களாக வாசித்தேன்.

கனலியின் ஜப்பானியச் சிறப்பிதழ் மிக முக்கியமான பங்களிப்பு. சிறுகதை, கவிதை, கட்டுரைகள், நேர்காணல்கள் எனச் சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து மொழிபெயர்த்திருக்கிறார்கள். மிகச்சிறப்பான மொழியாக்கங்கள். நேர்த்தியான வடிவமைப்பு.

சிறுகதைகளில் என் கனவுகளின் கெண்டை மீன், கடைசிப் புகைப்பிடிப்பாளன், தூய திருமணம் மூன்றும் மிகவும் பிடித்திருந்தன. இது போலவே அகுதாகவா குறுங்கதைகள், காஃப்கா கடற்கரையில் நாவலின் அத்தியாயம், ஜப்பானிலிருந்து சில கவிதைகள், கோகொரோ பற்றிய விக்ரம் சிவக்குமார் விமர்சனம், , நம்பி கிருஷ்ணன் எழுதி யுகியோ மிஷிமாவின் தேசப்பற்ற அல்லது மெருகூட்டப்பட்ட எ ஃகின் இன்சுவை கட்டுரையை மிகவும் ரசித்துப் படித்தேன்.

ஒரு புதிய வாசகன் ஜப்பானிய இலக்கியங்களை அறிந்து கொள்வதற்கான சரியான வாசலைத் திறந்து காட்டியிருக்கிறார்கள். இதழுக்குப் பங்களித்த மொழிபெயர்ப்பாளர்கள், கட்டுரையாளர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இணைய இதழில் இது போன்று ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பினைத் தொடர்ந்து செய்து வரும் க.விக்னேஷ்வரனுக்கும் அவரது நண்பர்களுக்கும் எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்.

http://kanali.in/tag/japanese-special-edition

0Shares
0