எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. (25.12.24)
அதில் எனது நான்கு புதிய நூல்கள் வெளியாகின்றன.
எனது கட்டுரைத்தொகுப்பான கற்பனை அலைகள் உலக இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளைப் பற்றியது.
எழுவதும் படிப்பதும் எனது இரண்டு சிறகுகள். தொடர்ந்து உலக இலக்கியத்தினை வாசித்து வருபவன் என்ற முறையில் சர்வதேச அளவிலான சமகால இலக்கியங்களையும், சிறந்த செவ்வியல் படைப்புகளையும் நான் அறிவேன். வாசிப்பின் வழியே நான் அடைந்த அனுபவத்தையும், கற்றுக் கொண்ட பாடங்களையும் இந்தக் கட்டுரைகளின் வழியே பதிவு செய்திருக்கிறேன்.
காஃப்கா, மார்க்வெஸ், கால்வினோ, ரிக்யூ, ஆன்டன் செகாவ், கவாபத்தா, மெல்வில், , நிசார் கப்பானி, ஹெஸ்ஸே, யோகோ சுஷிமா, செய் ஷோனகான், அகஸ்டோ மான்டெரோசோ, இகோர் கூஸெங்கோ, ஜான் ஃபோஸ்ஸே என உலகின் சிறந்த எழுத்தாளர்களைக் கவனப்படுத்துகிறது இக் கட்டுரைத் தொகுப்பு