கவிதையின் வெளிச்சம்

இயக்குநர் சீனு ராமசாமியின் புதிய கவிதைத்தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டேன். அண்ணா நூலக அரங்கில் நடைபெற்றது.

பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல் கவிதை நூலை நான் வெளியிட நடிகர் விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார்.

இந்த நூல் குறித்து கவிஞர் நந்தலாலா சிறப்புரை ஆற்றினார். செறிவான உரை. கவிதையை சமகால நிகழ்வுகளுடன் பொருத்திக் காட்டிப் பேசியது சிறப்பு.

நிகழ்வில் தோழர் எஸ்.ஏ.பெருமாள், கவிதா சொக்கலிங்கம், இரா.தே. முத்து, பாரதி நாகராஜன் கலந்து கொண்டார்கள். அரங்கு நிறைந்த கூட்டம்.

இந்த நிகழ்வில் கவிதையின் தனித்துவங்கள் குறித்தும், சீனு ராமசாமியின் கவிதைகள் பற்றியும் உரையாற்றினேன்.

நன்றி

ஸ்ருதி டிவி.

0Shares
0