காந்தி சிறுகதை

எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. ஆந்திர ஜோதி ஞாயிறு இணைப்பில் இந்தக் கதை வெளியாகியுள்ளது. இதனை சிறப்பாக மொழியாக்கம் செய்திருப்பவர் திருப்பதியை சேர்ந்த ஜி. பாலாஜி.

இந்தக் கதையை வாசித்துவிட்டு ஆந்திராவிலிருந்து நிறைய பாராட்டு செய்திகள் மின்னஞ்சலில் வந்தவண்ணம் இருக்கின்றன. கடப்பா மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஒரு டாக்டர் தன் வாழ்நாளில் இப்படி ஒரு கதையை படித்ததில்லை என்று சிறந்த பாராட்டுரை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.  இன்னொரு மொழியில் எனது கதை இத்தனை தீவிரமாக வாசிக்கபட்டு பாராட்டு பெறுவது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது. பாலாஜிக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்.

27.9.20

0Shares
0