விகடன் தீபாவளி மலரில் வெளியாகியுள்ள எனது சிறுகதை கிதார் இசைக்கும் துறவி குறித்து நிறையப் பாராட்டுகள் வந்தபடியே இருக்கின்றன. மூன்று நாட்களுக்குள் றாற்பது பேர் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள்.
கதை மிகவும் பிடித்திருப்பதாக வண்ணதாசன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். முகநூலிலும் கதை குறித்து எழுதியுள்ளார். அகரமுதல்வன் போனில் அழைத்துக் கதையைப் பாராட்டி உரையாடினார்.
பேராசிரியர் சரவணன் கதை குறித்து மிக விரிவான மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.
இந்தக் கதை மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது.
கிதார் இசைக்கும் துறவி என்ற தலைப்பில் தான் எனது புதிய சிறுகதை தொகுப்பு வெளியாகிறது.
மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி