சாத்தூர் கல்லூரியில்

நேற்று சாத்தூர் எஸ்.இராமசாமி நாயுடு  கல்லூரி தமிழ்த்துறை மற்றும் தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இணைந்து நடத்திய இலக்கியவிழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன்.

கல்லூரியின் முதல்வர் டாக்டர். சே.கணேஷ்ராம் அவர்கள் தலைமை உரையாற்றினார்.

முன்னாள் மக்களவை உறுப்பினர் திரு.V.அழகிரிசாமி அவர்கள் முன்னிலை வகித்து  சிறப்பாகப் பேசினார்.

திரு.சந்திரகாந்தன் கல்லூரி மாணவ மாணவியருக்கான கலை இலக்கியப் போட்டிகளை அறிமுகம் செய்தார்

இந்த நிகழ்வினை டாக்டர் அறம் ஏற்பாடு செய்திருந்தார். அவர் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியின் மகன்.  தந்தையைப் போலவே தீவிரமாக இலக்கியத்தை நேசிப்பவர். சிறந்த பண்பாளர்.

கோணங்கியும் நானும் தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் வீடு தேடிச் சென்று பலநாள் இலக்கியவிவாதம் செய்திருக்கிறோம்.

என் அண்ணன் தனுஷ்கோடி ராமசாமியின் மாணவர்.

என் முதல் கதை வெளியான போது அதை வாசித்து என்னை வாழ்த்தி மகிழ்ந்தவர் தனுஷ்கோடி

மறைந்த  தனுஷ்கோடிராமசாமி நினைவாக ஒரு இலக்கியப் பேரவையை நடத்தி வருகிறார் டாக்டர் அறம்.

கல்லூரி முதல்வர் கணேஷ் ராம் அவர்களும் தீவிர இலக்கிய வாசகர்.  நேற்றைய நிகழ்வு மிகச்சிறப்பாக இருந்தது.

இக் கல்லூரியில் படிப்பவர்களில் 90 விழுக்காடு கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். அதிலும் மாணவிகள். அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எனது உரையைக் கேட்டு ரசித்துப் பாராட்டினார்கள்.

கு.அழகிரிசாமி எழுதிய திரிபுரம் கதை சாத்தூரில் நடக்கிறது. அந்தக்கதையைப் பற்றி விரிவாகப் பேசினேன். பெண்கல்வி,  வரலாறு, இலக்கியம், சமகாலப் பிரச்சனைகள் எனத்தொட்டு மாணவர்களுடன் பேசியது மகிழ்ச்சி தருவதாக இருந்தது.

05.12.2019

0Shares
0