இரண்டு நாட்களின் முன்பாக டி.சுப்ரமணியம் எனும் திரைப்பட துணைஇயக்குனர் உலகத்திரைப்படங்கள், திரைப்பட இயக்குனர்கள் குறித்த இணையதளங்களை சிபாரிசு செய்யும்படியாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்காக இந்த இணையதள சுட்டிகளை சிபாரிசு செய்திருந்தேன்.
அவரை போல ஆர்வம் உள்ளவர்கள் பலரும் இருப்பதால் அதே பட்டியலை முன்வைக்கிறேன். இந்தஇணையதளங்கள் ஒரளவு உலக சினிமாவின் முக்கிய போக்குகளை அறிந்து கொள்ள உதவக்கூடியவை. புகழ்பெற்ற இயக்குனர்கள். சினிமாகட்டுரைகள், சமகால இலக்கியத்திற்கும் சினிமாவிற்குமான தொடர்பு. பல்வேறு தொழில்நுட்ப தகவல்கள், அறிமுகங்கள் என இவை உலகசினிமாவின் பல்வேறு முகங்களை முன்வைக்கின்றன.