சொல்வனம் சிறப்பிதழ்

சொல்வனம் இணையத்தில் வெளிவரும் தரமான இணையஇதழ்,
தேர்ந்த இலக்கியப் படைப்புகள், மொழிபெயர்ப்புகள், கலை மற்றும் அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது,
நான் தொடர்ந்து சொல்வனம் இதழை வாசித்து வருகிறேன்,
தற்போது சொல்வனம் தனது நூறாவது இதழாக அசோகமித்திரன் சிறப்பிதழை பதிவேற்றம் செய்துள்ளது,
நவீன தமிழ் இலக்கியத்தின் முதன்மை சாதனையாளரான அசோகமித்திரனின் படைப்புகளைக் கொண்டாடும் இந்த முயற்சி மிகவும் முக்கியமான இலக்கியப் பங்களிப்பாகும்,
இந்த இதழில் அசோகமித்திரனின் நேர்காணல், கட்டுரைகள். அவரது படைப்புகள் குறித்த விமர்சனக் கட்டுரைகள், அரிய புகைப்படங்களுடன் வெளியாகி உள்ளது.
சிறப்பான இந்த இலக்கிய இதழை உருவாக்கிய சொல்வனம் ஆசிரியர் குழுவினருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
***
0Shares
0