திருச்சி சமயபுரத்திலுள்ள எஸ்.ஆர்.வி. பள்ளி, சிறந்த எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள், சமூக சேவை செய்யும் ஆளுமைகளைக் கௌரவிக்கும் விதமாக வாழ்நாள் தமிழ் விருது, தமிழ் இலக்கிய விருது, சமநோக்கு விருது, படைப்பூக்க விருது என நான்கு விதமான விருதுகளை அளித்துவருகிறார்கள்.
இந்த ஆண்டிற்கான தமிழ் இலக்கிய விருது எனக்கு அளிக்கபடுவதாக எஸ். ஆர். வி. பள்ளி அறிவித்திருக்கிறது.
இந்த விருதினை எழுத்தாளர்கள் பிரபஞ்சன், வண்ணதாசன் , வண்ணநிலவன் ஆகியோர் கடந்த காலங்களில் பெற்றிருக்கிறார்கள்.
எழுத்தாளர்கள் அசோகமித்ரன். எஸ். வி. ராஜதுரை. ஆகியோர் கடந்த ஆண்டுகளில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கிறார்கள்.
அக்டோபர் 11 சனிக்கிழமை மாலை எஸ். ஆர். வி. பள்ளிவளாகத்தில் இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது
••••