தஸ்தாயெவ்ஸ்கியின் ஐந்து யானைகள்

A translation is not a caterpillar crawling from left to right, a translation always emerges from the whole. Do you understand? One has to make the text entirely one’s own. The Germans say “internalised”

Svetlana Geier

ரஷ்ய இலக்கியங்களை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் ஸ்வெட்லானா கேயர்.

தஸ்தாயெவ்ஸ்கியின் ஐந்து பெரிய நாவல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். இதற்காக 20 ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார். அந்த மொழிபெயர்ப்புகளை “ஐந்து யானைகள்” என்றே அழைக்கிறார். அவரது மொழிபெயர்ப்பு மற்றும் வாழ்க்கைச்சூழல். தஸ்தாயெவ்ஸ்கி மீது கொண்டுள்ள அபிமானத்தை இந்த ஆவணப்படம் சிறப்பாக விவரிக்கிறது

உக்ரேனைச் சார்ந்த ஸ்வெட்லானா ஸ்டாலினிச அரசின் நெருக்கடிகளுக்குப் பயந்து  ஜெர்மனியில் தஞ்சம் புகுந்திருக்கிறார். இந்த ஆவணப்படத்திற்காகவே மறுபடியும் தனது சொந்த ஊருக்குப் பயணம் மேற்கொள்கிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கைக்கும் ஸ்வெட்லானாவின் வாழ்க்கைக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. தஸ்தாயெவ்ஸ்கி போலவே ஸ்வெட்லானாவின் தந்தையும் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டிருக்கிறார்.

முதுமையிலும் தளராமல் ஸ்வெட்லானா செயல்படும் விதம். நாஜிக் கொடுமைகள் பற்றிய நினைவுகள், மொழிபெயர்ப்பு செய்வது குறித்த அவரது கருத்துகள், தஸ்தாயெவ்ஸ்கி படைப்புகள் பற்றிய பார்வையை வெளிப்படுத்தும் விதம் என ஸ்வெட்லானாவின் வாழ்வைச் சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

2010 இல் தனது 87 வயதில் ஸ்வெட்லானா கேயர் மறைந்தார்

0Shares
0