தஸ்தாயெவ்ஸ்கி நாடகம்

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல் மற்றும் அவரது வாழ்க்கையை மையப்படுத்தி மூன்று நாடகங்கள் எழுதியிருக்கிறேன்.

அவை புதுவை. சென்னை, திருச்சூரில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராவ் தனது தியேட்டர் லேப் மூலம் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு மணி நேர நாடகமாக நிகழ்த்தினார்

தற்போது வெளி ரங்கராஜன் மரண வீட்டின் குறிப்புகள் நாடகத்தை கூத்துப்பட்டறையில் நிகழ்த்தியுள்ளார்.

தஸ்தாயெவ்ஸ்கியின் Notes from Underground நாவலின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டு இந்த நாடகத்தை எழுதினேன்.

மரணவீட்டின் குறிப்புகள் நாடகம் புதுவை பல்கலைகழக நாடகத்துறையின் சார்பில் முருகபூபதி இயக்கத்தில் முன்பு நிகழ்த்தப்பட்டது. நாடகவெளி இதழில் இதன் பிரதி வெளியானது. நாடகத்தில் இடம்பெற்றுள்ள கவிதைகளை ரமேஷ் எழுதியிருக்கிறார்.

0Shares
0