திருநெல்வேலியில்

கடந்த செவ்வாய்கிழமை திருநெல்வேலியில்  நான் சாகித்ய அகாதமி பெற்றதற்காக பாராட்டுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வின் சிறப்பு நாதஸ்வரக் கலைஞர் காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் மனைவி இராமலட்சுமி அம்மாள் வந்து ஆசி வழங்கியது. அவருக்கு வயது 96. காய்ச்சல் காரணமாக உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு நிகழ்விற்கு வந்திருந்தார். நிகழ்வு முழுவதுமிருந்தார் . என் தலைதொட்டு ஆசி வழங்கினார்.  நிகழ்வில்  நிறைய நாதஸ்வரக்கலைஞர்கள் வந்து கலந்து கொண்டு எனக்குச் சிறப்பு செய்தார்கள். நிகழ்வை கவிஞர் கிருஷி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். மருத்துவர் ராமானுஜம், எழுத்தாளர்  நாரம்புநாதன். பேராசிரியர் ஆ.ராமசாமி,  சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்/ அனைவருக்கும் நன்றி.

0Shares
0