தேசாந்திரி புதிய வெளியீடுகள்-1

சென்னை புத்தகக் கண்காட்சியினை முன்னிட்டு தேசாந்திரி பதிப்பகம் புதிய நூல்களை வெளியிடுகிறது. அச்சில் இல்லாத எனது நூல்களின் மறுபதிப்பு மற்றும் புதிய நூல்கள் வெளியாகின்றன

சிறார்களுக்காக நான் எழுதிய கதைகளின் தொகுப்பு கதைக்கம்பளம் என்ற பெயரில் ஏழு சிறு நூல்களாக முன்பு வெளியாகியிருந்தது. அதைத் தொகுத்து நான்கு நூல்கள் ஒன்று சேர்ந்த ஒரே புத்தகமாக வெளியிடுகிறோம்

கடலோடு சண்டையிடும் மீன் என்ற தலைப்பில் வெளியாகிறது.

அண்டசராசரம்

நேதாஜியால் உருவாக்கபட்ட ஆசாத் வங்கியில் சேமித்து வைக்கபட்ட பணம், அவரது மரணத்திற்குப் பிறகு என்னவானது என்பதைக் கண்டறியும் துப்பறியும் கதையாக எழுதப்பட்டது அண்டசராசரம். சிறார்களுக்கான இந்த நாவலில் சர்க்கஸ் முதலாளியான ஒரு வயதான துப்பறியும் நிபுணரும், டீக்கடை பையன் ஒருவனும் இணைந்து இந்தப் புதிரின் விடையை கண்டறிகிறார்கள்.

அக்கடா

குண்டூசி ஒன்றின் பயணத்தை விவரிக்கும் இந்த சிறார் நாவல் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் விசித்திரங்களையும் கொண்டிருக்கிறது. வெவ்வேறு வகையான குண்டூசிகள், அவற்றின் வாழ்க்கை, அவர்களுக்குள் ஏற்படும் மோதல் எனப் புதிய கதைவெளியினை அறிமுகம் செய்கிறது இந்த நூல்

ஆலீஸீன் அற்புத உலகம்

உலகப் புகழ்பெற்ற சிறார் நாவலான ஆலீஸின் அற்புத உலகினை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நான் மொழியாக்கம் செய்தேன். பள்ளி மாணவர்களுக்குப் பரிசு அளிப்பதற்கான புத்தகமாக இதனை உருவாக்கினோம். முன்னதாக மூன்று பதிப்புகள் வெளியாகியிருக்கிறது. தற்போது அதன் புதிய பதிப்பினை தேசாந்திரி வெளியிடுகிறது

பிப்ரவரி 24 முதல் நந்தனம் YMCA வில் சென்னைப் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தக் கண்காட்சி நடைபெறும்

0Shares
0