தேவதச்சன் கவிதைகள்

தேவதச்சனின் முழுக்கவிதை தொகுப்பினை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது. இதில் 2016 வரையிலான அவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. 8ம் தேதி இந்த நூல் வெளியாகிறது. இதனை சென்னை புத்தகத் திருவிழால் உள்ள தேசாந்திரி பதிப்பக அரங்கில் பெற்றுக் கொள்ளலாம். கெட்டி அட்டைப் பதிப்பாக வெளியாகிறது.

கவிதை என்பது எதிரெதிர் உண்மைகளின் தழுவல் என்கிறார் கவிஞர் ஆக்டேவியோ பாஸ் அதனைத் தேவதச்சனின் கவிதைகளை வாசிக்கும் போது நன்றாக உணர முடிகிறது.

தண்ணீரைப் போல நிசப்தமாக, ரகசியமாக, தனக்கான பாதையைத் தானே உருவாக்கிக் கொண்டு செல்கின்றன அவரது கவிதைகள்.

அடையாளம் அழிந்த, வரிசை மனிதனாகிப் போன இன்றைய வாழ்வின் துயர்களை, குழப்பத்தைப் பேசும் இக்கவிதைகள் தினசரி நிகழ்வுகளை அதற்கு அப்பாற்பட்ட சாத்தியங்களாக மாற்றுகின்றன.

0Shares
0