தொடர் பயணங்கள்

கடந்த மாதம் 25 முதல் அக்டோபர் 10 வரை இடைவிடாத பயணம். அன்றாடம் இருநூறு முதல் நானூறு கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்திருக்கிறேன். அதுவும் மலேசியா பயணம் முடித்துவிட்டுச் சென்னை திரும்பிய மறுநாள் புத்தகக் கண்காட்சி நிகழ்வுகளுக்காகப் பயணம். பயணத்தின் ஊடே மழையில் நனைந்து காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டது. ஆயினும் ஒத்துக் கொண்ட நிகழ்வுகளைத் தவிர்க்க இயலவில்லை.

விருதுநகரில் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொண்ட போது முழுமையான ஓய்வு தான் உங்களுக்கான மருந்து என்றார்.

நேற்று விமானத்தில் சென்னை வந்து இறங்கிய போதும் மழை தொடர்ந்தது

வீடு வந்து அசதியில் நீண்ட நேரம் உறங்கினேன். இன்று காலையில் எழுந்த போதும் இருமல் குறையவில்லை.

அடுத்த சில நாட்களுக்கு முழுமையான ஒய்வில் இருப்பேன்.

டிசம்பரில் வெளியாகவுள்ள எனது புதிய புத்தகங்களுக்கான இறுதிப் பணிகள் காத்திருக்கின்றன. திரைப்பட வேலைகள், டேராடூன் பயணம், அமெரிக்கப் பயணம், பிறமொழிகளில் வெளியாகவுள்ள எனது புத்தகங்களுக்கான வெளியீட்டுவிழா நிகழ்வுகள் என வரிசையாகக் காத்திருக்கின்றன.

0Shares
0