2011 ஆண்டிற்கான நல்லி-திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன, இதில் ஆங்கிலத்தில் இருந்து நான் மொழியாக்கம் செய்த குழந்தைகளுக்கான கதைத் தொகுப்பான கால்முளைத்த கதைகள் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருதினைப்பெற்றிருக்கிறது.
உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலில் இயற்கையைப் பற்றி பல்வேறு இனக்குழுவினரிடம் உள்ள கதைகளைத் தேர்வு செய்து மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன்.
இந்த விருதிற்கு ரொக்கப் பரிசு ரூ.10,000. மற்றும் பாராட்டுப் பத்திரம் அளிக்கப்படுகிறது. இதற்கான விழா அக்டோபரில் நடைபெற உள்ளது.
**