படிக்கத் தெரிந்த சிங்கம்

படிக்கத் தெரிந்த சிங்கம்எஸ்.ராமகிருஷ்ணன் (சிறார் நாவல்)

விழியன்

**

எஸ்.ரா கதை சொல்லி கேட்பது ஒரு சுவாரஸ்யம். சுவாரஸ்யம் என்பதைவிட ஒரு மயக்கம் கொடுத்துவிடும். பிரசாத் ஸ்டுடியோ வாசலில் ஒருமுறை சந்தித்தபோது படிக்கத் தெரிந்த சிங்கத்தின் ஒன் லைனைரை கூறினார். குழந்தைகள் தினசரிகளை வாசிக்க வைக்க ஒரு சிறார் நாவல் என்றார். எஸ்.ரா செய்யப்போகும் மாயத்திற்காக காத்திருந்தேன். விறுவிறு வாசிப்பு. எட்டு வயது முதல் 12 வயது குழந்தைகளுக்கான புத்தகமாக வந்துள்ளது. அதைவிட சிறிய குழந்தைகளுக்கு வாசித்தும்காட்டலாம்.

ஒரு தினசரியில் வரும் பல்வேறு செய்திகளில் முக்கியத்துவத்தை ஒரு கற்பனைக்கதை மூலம் காட்டில் அமர்ந்து கதையில் போக்கினை கவனிக்க வைக்க முயல்கின்றார். வாவ் என்ற சிங்கம் எப்படி செய்தித்தாள் வாசிக்க ஆரம்பிக்கின்றது, அதைப்பற்றிய செய்தி செய்தித்தாளில் வர என்ன முயற்சிகள் செய்கின்றது, கடைசியாக எப்படி செய்தி வந்தது என்பதெ கதை. இடையில் நிறைய குட்டி குட்டி கதாபாத்திரங்கள்வாத்தியார், எலி, கழுதை, யாழினி என்று.

இந்த புத்தக கண்காட்சியில் தவர விடக்கூடாத சிறார் புத்தகம்.

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கம் : 48
விலை : ரூபாய் 30/-

0Shares
0