பரிந்துரைகள்

பரிந்துரை – 1
ஆன்டன் செகாவ் சிறுகதைகள் பத்துக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பாளர்களால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. அவற்றில் மிகச்சிறந்த தொகுப்பாக Selected Stories of Anton Chekhov -, Richard Pevear &, Larissa Volokhonsky என்ற மொழியாக்கத்தைச் சொல்வேன். இதில் 28 சிறுகதைகள் உள்ளன. வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன் ஒப்பிட்டு இக்கதைகளை வாசிக்கும் போது இதன் தரமும் கவித்துவமும் சிறப்பாகப் புலப்படுகின்றன. செகாவ் கதைகளில் பெரிய திருப்பங்கள், எதிர்பாராத அம்சங்கள் கிடையாது. இம்பிரஷனிச ஒவியங்களைப் போல அவை உலகை கண்முன்னே விரிக்கின்றன. நுண்மையான விவரிப்பே அதன் பலம்.
பரிந்துரை – 2
ஆன்டன் செகாவின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்க விரும்புகிறவர்களுக்கான எனது பரிந்துரை. Anton Chekhov: A Life Donald Rayfield ரேபீல்ட் லண்டன் பல்கலைகழத்தில் ரஷ்ய பேராசிரியராகப் பணியாற்றுகிறவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். ஐநூறு பக்கங்களுக்கும் மேலாக உள்ள விரிவான வாழ்க்கை வரலாறு.
0Shares
0