பருத்திப் பெண்டிர்

ஆர். பாலகிருஷ்ணன் IAS சங்க இலக்கியங்கள் குறித்துத் தொடர் உரைகளை இணையம் வழியாக நிகழ்த்தி வருகிறார். அதில் கடந்தவாரம்  பருத்திப் பெண்டிர் என்ற தலைப்பில் மிகச் சிறப்பான உரை ஒன்றை நிகழ்த்தினார்.

ஆர். பாலகிருஷ்ணன் IAS தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர் என்பதுடன் இந்திய ஆட்சிப்பணியின் மூத்த அதிகாரியாக இருப்பவர் என்பதால் புதிய வெளிச்சத்தில் சங்க இலக்கியங்களை அறிமுகம் செய்கிறார்.  இந்த உரை அவரது அறிவு விசாலத்தின் அடையாளம்.

தன்னை ஒரு தமிழ் மாணவன் என்று பெருமையோடு சொல்லிக் கொள்ளும் ஆர். பாலகிருஷ்ணன் அவர்களின் நாற்பதாண்டு காலத் தமிழ் இலக்கிய வாசிப்பின் கொடை என்றே இந்த உரைகளைச் சொல்வேன்.

பருத்திப் பெண்டிர் உரையில் பருத்தியின் வரலாறு பற்றியும் பருத்திப் பெண்டிர் பற்றியும் வியப்பூட்டும் தகவல்களைத் தந்திருக்கிறார். அத்தோடு உழைக்கும் மகளிர் பற்றிய பல்வேறு செய்திகள் புதியவை. உரையின் இடையே எத்தனை உதாரணங்கள். எவ்வளவு செய்திகள். வியப்பூட்டும் பேச்சு.

தமிழின் வேர்களை அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் கேட்க வேண்டிய உரை.

ஆர். பாலகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

இதனை ஏற்பாடு செய்து வரும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கும், களம் அமைப்பிற்கும் எனது அன்பும் வாழ்த்துகளும்

இணைப்பு

https://youtu.be/SyootbPJjBo

0Shares
0